PT 9.2.3

உலகம் அளந்த உத்தமர் தான் இவர்?

1760 வேயிருஞ்சோலைவிலங்கல்சூழ்ந்த
மெய்யமணாளர், இவ்வையமெல்லாம் *
தாயினநாயகராவர்தோழீ!
தாமரைக்கண்களிருந்தவாறு *
சேயிருங்குன்றம்திகழ்ந்ததொப்பச்
செவ்வியவாகிமலர்ந்தசோதி *
ஆயிரம்தோளொடுஇலங்குபூணும்
அச்சோஒருவரழகியவா!
1760 vey iruñ colai vilaṅkal cūzhnta *
mĕyya maṇāl̤ar iv vaiyam ĕllām *
tāyiṉa nāyakar āvar tozhī *
tāmaraik kaṇkal̤ irunta āṟu **
cey iruṅ kuṉṟam tikazhntatu ŏppac *
cĕvviya āki malarnta coti *
āyiram tol̤ŏṭu ilaṅku pūṇum- *
acco ŏruvar azhakiyavā-3

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1760. She says about the lord of Thirunāgai, “O friend, he is magnificent and bright, like a tall hill with beautiful lotus eyes and a thousand arms adorned with shining ornaments. He is the god Manālar of the temple in Thirumeyyam surrounded with mountains and bamboo groves. Acho, how can I describe his beauty that measured the whole world!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோழி! தோழியே!; வேயிரும் மூங்கிலின் பரந்த; சோலை சோலைகளையுடைய; விலங்கல் சூழ்ந்த குன்றுகளால் சூழ்ந்த; மெய்ய திருமெய்யத்திற்கு; மணாளர் தலைவரான; இவ் வையம் இந்த வையம்; எல்லாம் எல்லாம்; தாயின தாவி அளந்த; நாயகர் பெருமானோ இவர்!; தாமரை தாமரை போன்ற; கண்கள் கண்களின்; இருந்த ஆறு அழகு என்ன!; சேய் இருங் ஓங்கியும் பரந்துமிருக்கின்ற; குன்றம் மலைகள்; திகழ்ந்தது ஒப்ப போலிருக்கும்; செவ்விய ஆகி அழகுடையனவாய்; மலர்ந்த மிக்க பரவின; சோதி ஒளியை உடையனவான; ஆயிரம் தோளொடு ஆயிரம் தோளொடும்; இலங்கு பூணும் தோள்வளையோடும்; அழகியவா! ஒருவர் இவருடைய ஒப்பற்ற அழகை; அச்சோ ஆவர் என்னவென்று கூறுவேன்!