PT 9.1.6

பரசுராமாவதாரம் எடுத்தவன் இடம் இது

1753 மழுவினால்அவனிஅரசைமூவெழுகால்
மணிமுடிபொடிபடுத்து * உதிரக்
குழுவுவார்புனலுள்குளித்து வெங்
கோபம்தவிர்ந்தவன், குலைமலிகதலி *
குழுவும்வார்கமுகும்குரவும்நற்பலவும்
குளிர்தருசூதமாதவியும் *
செழுமையார்பொழில்கள்தழுவுநன்மாடத்
திருக்கண்ணங்குடியுள்நின்றானே.
1753 mazhuviṉāl avaṉi aracai mūvĕzhukāl *
maṇi muṭi pŏṭipaṭuttu * utirak
kuzhuvu vār puṉalul̤ kul̤ittu * vĕm kopam
tavirntavaṉ-kulai mali katali **
kuzhuvum vār kamukum kuravum nal palavum *
kul̤ir taru cūta mātaviyum *
cĕzhumai ār pŏzhilkal̤ tazhuvum nal māṭat *
tirukkaṇṇaṅkuṭiyul̤ niṉṟāṉe-6

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1753. The lord who took the form of BalaRāman, and conquered many kings with his mazu weapon, crushed their crowns, made their blood flow and sated his anger stays in Thirukkannangudi where bunches of bananas, groups of tall kamugu and kuravu trees and cool mādhavi creepers bloom in the flourishing groves that embrace the tall beautiful palaces.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மூவெழுகால் இருபத்தொரு தலைமுறை; அவனி பூமியிலுள்ள; அரசை அரசர்களுடைய; மணி ரத்தினங்களினாலான; முடி கிரீடங்களை உடைய தலைகளை; மழுவினால் கோடாலியால்; பொடி படுத்து பொடிப் பொடியாக்கி; உதிரக் குழுவு ரத்த; வார் புனல் உள் வெள்ளத்தில்; குளித்து குளித்து; வெம் கோபம் கடும் கோபம்; தவிர்ந்தவன் தணிந்த பரசுராமன்; குலை மலி குலைகள் நிறைந்த; கதலி வாழை; குழுவும் தோப்பும்; வார் உயர்ந்திருக்கும்; கமுகும் பாக்குமரங்களும்; குரவும் குரவமரங்களும்; நல் பலவும் பலா மரங்களும்; குளிர் தரு சூதம் குளிர்ந்த மாமரங்கள்; மாதவியும் குருக்கத்தி மரங்களும் ஆகிய; செழுமை செழிப்புடைய; ஆர் பொழில்கள் சோலைகளால்; தழுவும் சூழ்ந்த; நல் மாட நல்ல மாடமாளிகைகளையுடைய; திருக்கண்ணங்குடியுள் திருக்கண்ணங்குடியுள்; நின்றானே நின்றானே