PT 8.9.7

நான் சவுரிராஜனை எப்படி மறப்பேன்?

1734 பெற்றார்பெற்றொழிந்தார் பின்னும்நின்று அடியேனுக்கு *
உற்றானாய்வளர்த்து என்னுயிராகிநின்றானை *
முற்றாமாமதிகோள் விடுத்தானைஎம்மானை *
எத்தால்யான்மறக்கேன்? இதுசொல்என்ஏழைநெஞ்சே!
1734 pĕṟṟār pĕṟṟu ŏzhintār * piṉṉum niṉṟu aṭiyeṉukku *
uṟṟāṉ āy val̤arttu * ĕṉ uyir āki niṉṟāṉai **
muṟṟā mā mati kol̤ viṭuttāṉai * ĕmmāṉai- *
ĕttāl yāṉ maṟakkeṉ? * itu cŏl ĕṉ ezhai nĕñce-7

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1734. O lord of kannapuram, you removed the curse of the beautiful crescent moon and you are my life. When my father and mother gave birth to me and left this world you took care of me like my own dear parents and raised me. How can I forget my lord? Tell me, O my poor heart!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெற்றார் பெற்றவர்; பெற்று பெற்ற பின் விட்டு; ஒழிந்தார் அகன்றனர்; பின்னும் பின்பு; நின்று அடியேனுக்கு எனக்கு இன்று; உற்றான் ஆய் எல்லாவித உறவுமாகி; வளர்த்து என்னை வளர்த்து; என் உயிர் ஆகி என் உயிர் ஆகி; நின்றானை இருப்பவனான; எம்மானை பெருமானை; முற்றா மா மதி இளம் சந்திரனின்; கோள் நோயை; விடுத்தானை போக்கிய பெருமானை; எத்தால் யான் எப்படி நான்; மறக்கேன்? மறப்பேன்?; என் ஏழை அறியாமையுடைய; நெஞ்சே! மனமே!; இது சொல் இதைப்பற்றி நீ எனக்குச் சொல்லு