PT 8.9.6

மனமே! கண்ணபுரத்தானை மறவாதே

1733 எஞ்சாவெந்நரகத்து அழுந்திநடுங்குகின்றேற்கு *
அஞ்சேலென்றுஅடியேனை ஆட்கொள்ளவல்லானை *
நெஞ்சே! நீநினையாது இறைப்பொழுதும்இருத்தி கண்டாய் *
மஞ்சார்மாளிகைசூழ் வயலாலிமைந்தனையே.
1733 ĕñcā vĕm narakattu * azhunti naṭuṅkukiṉṟeṟku *
añcel ĕṉṟu aṭiyeṉai * āṭkŏl̤l̤a vallāṉai- **
nĕñce nī niṉaiyātu * iṟaippŏzhutum iruttikaṇṭāy- *
mañcu ār māl̤ikai cūzh * vayal āli maintaṉaiye-6

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1733. I do not want to go to cruel hell, I tremble even to think of it. O heart, he (lord of kannapuram) is the only one who can say, “Do not be afraid, ” and save you. You should always be mindful of the young god of Vayalāli (Thiruvāli) surrounded with palaces over which clouds float.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எஞ்சா வெம் நரகத்து கொடிய நரகத்திலே; அழுந்தி அழுந்தி; நடுங்குகின்றேற்கு நடுங்குகின்ற என்னை; அஞ்சேல் என்று பயப்படாதே என்று; அடியேனை அடியவனான என்னை; ஆட்கொள்ள ஆட்கொள்ள; வல்லானை வல்லவனை; மஞ்சு ஆர் மேகமண்டலத்தளவும் ஓங்கின; மாளிகை சூழ் மாளிகைகளால் சூழ்ந்த; வயல் ஆலி வயல் ஆலி; மைந்தனையே அம்மானை; நெஞ்சே! நீ நெஞ்சே! நீ; இறைப் பொழுதும் நொடிப்பொழுதும்; நினையாது நினைக்காமல்; இருத்திகண்டாய் இருந்திடாதே