PT 8.9.1

கண்ணபுரப் பெருமானை அடைந்து நான் உய்ந்தேன்

1728 கைம்மானமதயானை இடர்தீர்த்தகருமுகிலை *
மைம்மானமணியை அணிகொள்மரதகத்தை *
எம்மானைஎம்பிரானைஈசனை என்மனத்துள்
அம்மானை * அடியேன்அடைந்துய்ந்துபோனேனே. (2)
1728 ## kaim māṉa mata yāṉai * iṭar tīrtta karu mukilai *
maim māṉa maṇiyai * aṇi kŏl̤ maratakattai **
ĕmmāṉai ĕm pirāṉai īcaṉai * ĕṉ maṉattul̤
ammāṉai- * aṭiyeṉ aṭaintu uyntupoṉeṉe-1

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1728. The dark cloud-colored lord of kannapuram who saved the long-trunked Gajendra from the crocodile, is a precious emerald-colored jewel, my dear one, Esan, my father, and I, his devotee, keep him in my heart and am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கைம் மான நீண்ட துதிக்கையுடையதும்; மத பெருந்தன்மையுடைய; யானை மதயானையின்; இடர் தீர்த்த துயர் தீர்த்த; கரு காளமேகம் போன்ற; முகிலை திருமேனி உடையவனும்; மைம் மை போன்ற; மான நிறம் உடையவனும்; மணியை நீல ரத்னம் போன்றவனும்; அணி கொள் அழகிய; மரகதத்தை மரகதம் போன்றவனும் எனக்கு; எம்மானை ஸ்வாமியானவனை; எம் பிரானை எனக்கு உபகாரகனான; ஈசனை எம்பெருமானை; என் மனத்துள் என் மனத்துள்; அம்மானை இருக்கும் அவனை; அடியேன் அடைந்து அடியேன் அடைந்து; உய்ந்து போனேனே உய்வு பெற்றேன்