PT 8.7.6

இராமபிரான் இருப்பிடம் இது

1713 மழுவியல்படையுடையவனிடம் மழைமுகில் *
தழுவியஉருவினர் திருமகள்மருவிய *
கொழுவியசெழுமலர் முழுசியபறவைபண் *
எழுவியகணபுரம் அடிகள்தம்இடமே.
1713 mazhuvu iyal paṭai * uṭaiyavaṉ iṭam mazhai mukil *
tazhuviya uruviṉar- * tirumakal̤ maruviya **
kŏzhuviya cĕzhu malar * muzhuciya paṟavai paṇ *
ĕzhuviya kaṇapuram- * aṭikal̤-tam iṭame-6

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1713. The lord was born with BalaRāman who carries a mazhu weapon. Embracing beautiful Lakshmi, he stays in Thirukkannapuram where the sound of the singing of the birds playing among the flourishing blossoms spreads everywhere.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமகள் மருவிய திருமகள் இருக்கும்; கொழுவிய செழுமையான; செழு மலர் தாமரைப்பூவில்; முழுசிய மூழ்கிக் கிடக்கும்; பறவை வண்டுகளின்; பண் இசை எங்கும்; எழுவிய வியாபித்திருக்கும் இடம்; கணபுரம் திருக்கண்ணபுரமானது; மழுவு இயல் படை கோடாலியை இயல்பாக; உடையவன் இடம் உடையவர் இருக்குமிடமும்; மழை மழையோடு கூடின; முகில் மேகம் போன்ற; தழுவிய உருவினர் உருவத்தையுடையவரான; அடிகள் தம் எம்பெருமானின்; இடமே இருப்பிடமாகும்