PT 8.7.3

குன்று குடையாக எடுத்தவன் இடம் இது

1710 புயலுறுவரைமழை பொழிதர, மணிநிரை *
மயலுற, வரைகுடை எடுவியநெடியவர் *
முயல்துளர்மிளைமுயல்துள வளவிளைவயல் *
கயல்துளுகணபுரம் அடிகள்தம்இடமே.
1710 puyal uṟu varai-mazhai * pŏzhitara maṇi nirai *
mayal uṟa varai kuṭai * ĕṭuviya nĕṭiyavar- **
muyal tul̤ar mil̤ai muyal tul̤a * val̤a vil̤ai vayal *
kayal tul̤u kaṇapuram- * aṭikal̤-tam iṭame-3

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1710. Our faultless Nedumāl who carried Govardhanā mountain as an umbrella and protected the cows and the cowherds from the storm stays in Thirukkannapuram where baby rabbits jump in the flourishing fields as farmers weed and fish frolic in the ponds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முயல் களை பிடுங்கும்; துளர் உழவர்கள் முகத்தில்; மிளை சிறு தூறுகளிலிருந்தும் புதர்களிலிருந்தும்; முயல் துள முயல்கள் துள்ள; வள விளை வளம் மிக்க செழிப்பான; வயல் வயல்களில்; கயல் துளு கயல் மீன்கள் துள்ள; புயல் உறு மேகங்களில் புயல் காற்றோடு கூடின; வரை மழை பொழிதர கல் மழை பொழிந்த போது; மணி நிரை அழகிய பசுக்கூட்டம்; மயல் உற கலங்கி நிற்க; வரை கோவர்த்தன மலையை; குடை எடுவிய குடையாக பிடித்த; நெடியவர் காக்கும் பெருமான்; தம் இடமே இருக்கும் ஊர்; கணபுரம் அடிகள் திருக்கண்ணபுரமே