PT 8.7.2

கண்ணபிரானின் இடம் கண்ணபுரம்

1709 இணைமலிமருதினொடு எருதிறஇகல்செய்து *
துணைமலிமுலையவள் மணமிகுகலவியுள் *
மணமலிவிழவினொடு அடியவரளவிய *
கணமலிகணபுரம் அடிகள்தம்இடமே.
1709 iṇai mali marutiṉŏṭu * ĕrutiṟa ikal cĕytu *
tuṇai mali mulaiyaval̤ * maṇam miku kalaviyul̤- **
maṇam mali vizhaviṉŏṭu * aṭiyavar al̤aviya *
kaṇam mali kaṇapuram- * aṭikal̤-tam iṭame-2

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1709. The lord who fought with seven strong bulls and married lovely-breasted Nappinnai in a lavish ceremony and embraced her stays in Thirukkannapuram where there are many festivals and devotees live and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மணம் மிகு மகிழ்ச்சி மிகுந்த; விழவினொடு விழாக்களில்; அடியவர் அளவிய அடியவர்களின் கூட்டம்; கணமலி நிறைந்த; கணபுரம் திருக்கண்ணபுரமானது; இணை மலி இணைந்திருக்கும்; மருது இரட்டை மருதமரங்களை; இற இற்று விழும்படி செய்தவனும்; எருதினொடு எருதுகளோடு; இகல்செய்து போர் புரிந்தவனுமான; துணை அழகிய; மலிமுலையவள் நப்பின்னையின்; மணம் மலி திருமணத்தில் உண்டாகும்; கலவியுள் சேர்க்கையின் அனுபவத்தை அடைந்த; அடிகள் பெருமான்; தம் இடமே இருக்குமிடம் திருக்கண்ணபுரமே