PT 8.7.1

திருமகள் கணவன் உறைவிடம் கண்ணபுரம்

1708 வியமுடைவிடையினம் உடைதரமடமகள் *
குயமிடைதடவரை அகலமதுடையவர் *
நயமுடைநடையனம் இளையவர்நடைபயில் *
கயமிடைகணபுரம் அடிகள்தம்இடமே. (2)
1708 ## வியம் உடை விடை இனம் * உடைதர மட மகள் *
குயம் மிடை தட வரை * அகலம் அது உடையவர் **
நயம் உடை நடை அனம் * இளையவர் நடை பயில் *
கயம் மிடை கணபுரம் * அடிகள் தம் இடமே 1
1708 ## viyam uṭai viṭai iṉam * uṭaitara maṭa makal̤ *
kuyam miṭai taṭa varai * akalam-atu uṭaiyavar- **
nayam uṭai naṭai aṉam * il̤aiyavar naṭai payil *
kayam miṭai kaṇapuram- * aṭikal̤-tam iṭame-1

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1708. He with a wide mountain-like chest who killed seven bulls to marry beautiful Nappinnai stays in Thirukkannapuram filled with many ponds where swans see beautiful women and imitate their walk.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
இளையவர் பெண்களின்; நடை பயில் நடையழகை கற்று பழகி; நயம் உடை ஆனந்தம் உண்டாக்கும்; நடை நடை அழகை உடைய; அனம் அன்னப்பறவைகள்; கயம்இடை பொய்கை நிறைந்த; கணபுரம் கண்ணபுரமானது; வியம் உடை வலிமையுடைய; விடை இனம் எருதுகளின் இனத்தை; உடைதர அழித்து; மட மகள் நப்பின்னையின்; குயம் மிடை மார்பகங்களை அணைத்த; தட வரை மலை போன்ற; அகலம் அது உடையவர் மார்பையுடையவரான; அடிகள் நம் கண்ண பெருமான்; தம்இடமே இருக்குமிடம் அதுவே