PT 8.6.9

கண்ணனின் கண்ணபுரம் தொழுவோம்

1706 குன்றால்மாரிபழுதாக்கிக் கொடியேரிடையாள்பொருட்டாக *
வன்தாள்விடையேழ்அன்றடர்த்த வானோர்பெருமான்மாமாயன் *
சென்றான்தூதுபஞ்சவர்க்காய்த் திரிகாற்சகடம்சினமழித்து *
கன்றால்விளங்காயெறிந்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1706 kuṉṟāl māri pazhutu ākki * kŏṭi er iṭaiyāl̤ pŏruṭṭāka *
vaṉ tāl̤ viṭai ezh aṉṟu aṭartta * vāṉor pĕrumāṉ mā māyaṉ **
cĕṉṟāṉ tūtu pañcavarkku āyt * tiri kāl cakaṭam ciṉam azhittu *
kaṉṟāl vil̤aṅkāy ĕṟintāṉ ūr * kaṇṇapuram nām tŏzhutume-9

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1706. The Māyan, the lord of the gods in the sky, carried Govardhanā mountain as an umbrella and protected the cows and the cowherds from the storm, killed seven strong-legged bulls to marry the vine-waisted Nappinnai, went as a messenger to the Kauravās for the Pāndavās, kicked and broke the cart when Sakatasuran appeared in that form and killed him, and threw a calf at the vilam tree and killed two Asurans. Let us go to Thirukkannapuram and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்றால் மலையினால்; மாரி பெருமழையை; பழுது ஆக்கி தடுத்தவனாய்; கொடி ஏர் கொடிபோன்ற; இடையாள் இடையை யுடைய; பொருட்டாக நப்பின்னைக்காக; வன் தாள் வலிய கால்களையுடைய; விடை ஏழ் ஏழு எருதுகளை; அன்று அடர்த்த முன்பு அடக்கினவனும்; வானோர் பெருமான் தேவர்களின் தலைவனும்; மா மாயன் மா மாயவனும்; பஞ்சவர்க்கு ஆய் பாண்டவர்களுக்காக; சென்றான் தூது தூது சென்றவனும்; திரி கால் சகடம் ஊர்ந்து செல்லும் சகடத்தின்; சினம் அழித்து கோபத்தை அழித்தவனும்; கன்றால் கன்றாக வந்த அசுரனை; விளங்காய் விளாங்காயாக வந்த; எறிந்தான் அசுரன் மீது எறிந்த; ஊர் பெருமானின் ஊரான; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்