PT 8.6.4

சேதுபந்தனம் செய்தவனைத் தொழுவோம்

1701 மல்லைமுந்நீரஅதர்பட வரிவெஞ்சிலைகால்வளைவித்து *
கொல்லைவிலங்குபணிசெய்யக் கொடியோனிலங்கைபுகலுற்று *
தொல்லைமரங்கள்புகப்பெய்து துவலைநிமிர்ந்துவானணவ *
கல்லால்கடலையடைத்தானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1701 mallai munnīr atarpaṭa * vari vĕm cilai kāl val̤aivittu *
kŏllai vilaṅku paṇicĕyya * kŏṭiyoṉ ilaṅkai pukal uṟṟu **
tŏllai maraṅkal̤ pukap pĕytu * tuvalai nimirntu vāṉ aṇava *
kallāl kaṭalai aṭaittāṉ ūr * kaṇṇapuram nām tŏzhutume-4

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1701. When Rāma went to bring back his wife Sita, and shot his arrows at the ocean making Varuna the god of the sea come to aid him, the monkeys in the Kishkinda forest built a bridge over the ocean with stones and trees and helped him as the spray from the ocean rose to the sky. Thirumāl who as Rāma with the monkey army entered Lankā, the kingdom of the cruel Rākshasa king Rāvana, stays in Thirukkannapuram. Let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொடியோன் கொடிய இராவணனின்; இலங்கை இலங்கையில்; புகல் உற்று பிரவேசிப்பதற்காக; மல்லை முன் செழிப்பான; நீர் அதர்பட கடல் வழிவிடும்படி; வரி வெம் வரிகளையுடைய கொடிய; சிலை வில்லை; கால் வளைவித்து வளையச்செய்து; கொல்லை விலங்கு வானரங்கள்; பணி செய்ய கைங்கர்யம் செய்ய; தொல்லை மரங்கள் பழைய மரங்களை; புக கடலினுள் புகும்படியாக; பெய்து வெட்டிப் போட்டு; துவலை நிமிர்ந்து திவலைகள் கிளர்ந்த கடலில்; வான் அணவ ஆகாசத்து அளவு; கல்லால் கடலை மலைகளால் கடலில்; அடைத்தான் அணைகட்டிய பெருமானின்; ஊர் கண்ணபுரம் ஊரான திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்