PT 8.6.2

கருடவாகனனை நாம் தொழுவோம்

1699 பொருந்தாஅரக்கர்வெஞ்சமத்துப் பொன்றஅன்றுபுள்ளூர்ந்து *
பெருந்தோள்மாலிதலைபுரளப் பேர்ந்தஅரக்கர்தென்னிலங்கை *
இருந்தார்தம்மையுடன்கொண்ட அங்குஎழிலார்பிலத்துப்புக்கொளிப்ப *
கருந்தாள்சிலைகைக்கொண்டானூர் கண்ணபுரம்நாம்தொழுதுமே.
1699 pŏruntā arakkar vĕm camattup * pŏṉṟa aṉṟu pul̤ ūrntu *
pĕrun tol̤ māli talai pural̤ap * pernta arakkar tĕṉ ilaṅkai **
iruntār-tammai uṭaṉkŏṇṭu * aṅku ĕzhil ār pilattup pukku ŏl̤ippa *
karun tāl̤ cilai kaikkŏṇṭāṉ ūr * kaṇṇapuram nām tŏzhutume 2

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-29

Simple Translation

1699. Our lord who carried a strong bow in his hand and shot arrows and killed all the Rākshasas in southern Lankā and who rode on Garudā to fight with strong-armed Māli, making his head roll on the ground, stays in Thirukkannapuram. Let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொருந்தா முன்பு சத்ருக்களான; அரக்கர் அரக்கர்கள்; வெம் சமத்து கொடிய போரில்; பொன்ற அன்று முடியும்படியாக அன்று; புள் ஊர்ந்து கருடன் மேல் ஊர்ந்து; பெருந் தோள் வலிய தோள்களையுடைய; மாலி மாலியின்; தலை புரள தலை பூமியில் புரளும்படியாகவும்; பேர்ந்த அரக்கர் அவனைத் தவிர மற்ற அரக்கர்கள்; தென் இலங்கை தென் இலங்கையிலிருந்த; இருந்தார் தம்மை மற்றுமுள்ள அரக்கர்களையும்; உடன் இலங்கையிலிருந்து; கொண்டு கூட்டிக்கொண்டு; அங்கு அங்கிருந்து; எழிலார் பிலத்துப்புக்கு அழகிய பாதாளத்தில்; ஒளிப்ப புகுந்து ஒளிய; கருந்தாள் சிலை வயிரம் பாய்ந்த தனுசை; கைக் கொண்டான் கையிலுடைய பெருமானின்; ஊர் கண்ணபுரம் ஊரான திருக்கண்ணபுரத்தை; நாம் தொழுதுமே நாம் தொழுவோம்