PT 8.5.9

பிரிவுத்துயர் என்னைக் கொல்கின்றதே!

1696 கனஞ்செய்மாமதிள்கணபுரத்தவனொடும் கனவினில்அவன்தந்த *
மனஞ்செயின்பம்வந்துஉள்புகவெள்கி என்வளைநெகஇருந்தேனை *
சினஞ்செய்மால்விடைச்சிறுமணியோசை என்சிந்தையைச்சிந்துவிக்கும் *
அனந்தலன்றிலின்னரிகுரல் பாவியேனாவியைஅடுகின்றதே.
1696 kaṉam cĕy mā matil̤ kaṇapurattavaṉŏṭum *
kaṉaviṉil avaṉ tanta *
maṉam cĕy iṉpam vantu ul̤ puka vĕl̤ki * ĕṉ
val̤ai nĕka irunteṉai **
ciṉam cĕy māl viṭaic ciṟu maṇi ocai * ĕṉ
cintaiyaic cintuvikkum *
aṉantal aṉṟiliṉ ari kural * pāviyeṉ
āviyai aṭukiṉṟate-9

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1696. She says, “I had a dream that the god of Thirukkannapuram surrounded with strong walls came to me and made my heart joyful. When I think of it my bangles grow loose. Now it is night! The sound of the small bells of the bulls pains my heart and the sorrowful sound of the andril bird keeps me awake and kills me. I must have done much bad karmā. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கனம் செய் கனமாக கட்டப்பட்ட; மா மதிள் பெரிய மதிள்களையுடைய; கணபுரத்த திருகண்ணபுரத்து; அவனொடும் எம்பெருமான்; கனவினில் அவன் தந்த கனவில் அவன் தந்த; மனம் செய் இன்பம் மாநஸிகமான இன்பமானது; வந்து உள் புக நினைவுக்குவர; வெள்கி அதை நினைத்து; என் வளை நெக என் கைவளை கழலும்படி; இருந்தேனை இருந்த என்னை; சினம் செய் மால் கோவங்கொண்ட பெரிய; விடை வடிவுடைய எருதின்; சிறு மணி கழுத்திலிருந்த; ஓசை மணியின் ஓசை; என் சிந்தையை எனது நெஞ்சை; சிந்துவிக்கும் சிதிலமடையச்செய்கிறது; அனந்தல் தூக்கத்தில்; அன்றிலின் அன்றிற்பறவையினுடைய; அரி குரல் பாவியேன் தழு தழுத்த பேச்சானது; ஆவியை பாவியான என் உயிரை; அடுகின்றதே! வாட்டுகின்றது