PT 8.5.6

தூக்கமே வரவில்லை; இரவு நீள்கிறதே!

1693 முரியும்வெண்திரைமுதுகயம்தீப்பட முழங்கழலெரியம்பின் *
வரிகொள்வெஞ்சிலைவளைவித்தமைந்தனும் வந்திலன்என்செய்கேன்? *
எரியும்வெங்கதிர்துயின்றது பாவியேன்இணைநெடுங்கண்துயிலா *
கரியநாழிகைஊழியில்பெரியன கழியுமாறுஅறியேனே.
1693 muriyum vĕṇ tirai mutu kayam tīppaṭa *
muzhaṅku azhal ĕri ampiṉ *
vari kŏl̤ vĕm cilai val̤aivitta maintaṉum *
vantilaṉ ĕṉ cĕykeṉ? **
ĕriyum vĕm katir tuyiṉṟatu * pāviyeṉ
iṇai nĕṭuṅ kaṇ tuyilā *
kariya nāzhikai ūzhiyiṉ pĕriyaṉa *
kazhiyum āṟu aṟiyeṉe-6

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1693. (kannapuram) She says, “The young lord who bent his bow and shot his fiery arrows, destroying Lankā surrounded by the ocean with its rolling waves, has not come to see me. What can I do? The hot sun that burned me has gone to sleep and I am pitiful. My long eyes do not close and this dark night is longer than an eon. When will it pass? I do not know. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முரியும் கிளர்ந்து; வெண் திரை வெளுத்த அலைகளையுடைய; முது கயம் தீப்பட கடல் எரியும்படி; முழங்கு அழல் ஒலியோடு நெருப்பு; எரி அம்பின் எரியும் அம்புடைய; வரி கொள் வெஞ்சிலை அழகிய வில்லை; வளைவித்த வளைத்த; மைந்தனும் மிடுக்கை உடைய ராமனும்; வந்திலன வரவில்லை; என் செய்கேன்? என்ன செய்வேன்?; எரியும் வெங் கதிர் எரியும் சூரியனும்; துயின்றது மறைந்தான்; பாவியேன் பாவியேன்; இணை நெடுங் கண் என் இரண்டு கண்களும்; துயிலா உறங்க வில்லை; கரிய நாழிகை கருத்த நாழிகை; ஊழியில் பெரியன ஊழியில் பெரிய இரவானது; கழியும் ஆறு எப்படி கழியப் போகிறதோ; அறியேனே! அறியேன்