PT 8.5.4

தென்றல் நின்றால் என் உயிர் நிற்கும்

1691 கயங்கொள்புண்தலைக்களிறுந்துவெந்திறல் கழல்மன்னர்பெரும்போரில் *
மயங்கவெண்சங்கம்வாய்வைத்தமைந்தனும் வந்திலன், மறிகடல்நீர் *
தயங்குவெண்திரைத்திவலைநுண்பனியென்னும் தழல்முகந்துஇளமுலைமேல் *
இயங்குமாருதம்விலங்கில்என்னாவியை எனக்கெனப்பெறலாமே.
1691 கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெம்திறல் *
கழல் மன்னர் பெரும் போரில் *
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் *
வந்திலன் மறி கடல் நீர் **
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் *
தழல் முகந்து இள முலைமேல் *
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை *
எனக்கு எனப் பெறலாமே 4
1691 kayam kŏl̤ puṇ talaik kal̤iṟu untu vĕmtiṟal *
kazhal maṉṉar pĕrum poril *
mayaṅka vĕṇ caṅkam vāy vaitta maintaṉum *
vantilaṉ maṟi kaṭal nīr **
tayaṅku vĕṇ tirait tivalai nuṇ paṉi ĕṉum *
tazhal mukantu il̤a mulaimel *
iyaṅkum mārutam vilaṅkil ĕṉ āviyai *
ĕṉakku ĕṉap pĕṟalāme-4

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1691. (kannapuram) She says, “The young god who blew his white conch on the terrible battlefield where mighty ankleted enemy kings grew confused as they rode on wounded elephants in the Bhārathā war has not come to see me and the breeze that carries fire-like dew touches my young breasts. My life will be mine only if this breeze stops blowing. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கயங் கொள் ரண ஜலம் மிகுந்த; புண் தலை புண்பட்ட தலையையுடைய; களிறு உந்த யானைகள் மீதேறி; வெம் திறல் வலிமையுடைய; கழல் மன்னர் வீரக்கழலையுடைய மன்னர்கள்; பெரும் போரில் பெரும் பாரதப் போரில்; மயங்க வெண் சங்கம் மயங்கும்படி வெண் சங்கை; வாய் வைத்த வாயில் வைத்து ஊதிய; மைந்தனும் மிடுக்குடைய கண்ணனும்; வந்திலன் என்னிடம் வந்து சேரவில்லை; மறி கடல் நீர் அலை கடலின் நீரில்; தயங்கு அசைந்து வரும்; வெண் திரை வெண்மையான அலைகளின்; திவலை நுண் திவலைகளாகிற நுண்ணிய; பனி என்னும் பனியானது; தழல் முகந்து நெருப்பை முகந்து வந்து; இள முலை மேல் என் மார்பகங்களின்; இயங்கும் மாருதம் மீது வீச இக்காற்று; விலங்கில் என் வீசாமலிருந்தால் தான்; ஆவியை எனக்கு என் பிராணன்; எனப் பெறலாமே! எனக்கு உரித்ததாக ஆகும்