PT 8.5.3

அஞ்சாதே என்று சொல்ல யாரும் இல்லையே!

1690 ஆயன்மாயமேயன்றி, மற்றென்கையில் வளைகளும்இறைநில்லா *
பேயின்னாருயிருண்டிடும்பிள்ளை நம்பெண்ணுயிர்க்குஇரங்குமோ? *
தூயமாமதிக்கதிர்சுடத்துணையில்லை இணைமுலைவேகின்றதால் *
ஆயன்வேயினுக்கழிகின்றதுஉள்ளமும் அஞ்சேலென்பாரிலையே.
1690 āyaṉ māyame aṉṟi maṟṟu ĕṉ kaiyil *
val̤aikal̤um iṟai nillā *
peyiṉ ār uyir uṇṭiṭum pil̤l̤ai * nam
pĕṇ uyirkku iraṅkumo? **
tūya mā matik katir cuṭa tuṇai illai *
iṇai mulai vekiṉṟatāl *
āyaṉ veyiṉukku azhikiṉṟatu ul̤l̤amum *
añcel ĕṉpār ilaiye-3

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1690. (kannapuram) She says, “The bangles on my arms have grown loose and fallen. Is this because of the magic of that cowherd who drank the milk of the female devil when he was a child? How could he have compassion on us? The rays of the pure beautiful moon burn me, and I have no one to help. My breasts pain and my heart suffers listening to the music of the flute of the cowherd. There is no one to comfort me and say, ‘Do not be afraid. ’”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆயன் கண்ணனின்; மாயமே வஞ்சனையே அன்றி; அன்றிமற்று வேறில்லை; என் கையில் என் கையிலிருக்கும்; வளைகளும் வளையல்களும்; இறை நில்லா ஒரு நொடியும் நிற்பதில்லை; பேயின் ஆருயிர் பூதனையின் பிராணனை; உண்டிடும் உண்டிடும்; பிள்ளை நம் பிள்ளையான நம் கண்ணன்; பெண் உயிர்க்கு பெண்ணான என் உயிர்க்கு; இரங்குமோ? இரங்குவானோ?; தூய மா மதி தூய சந்திரனின்; கதிர் சுட கிரணங்கள் தஹிக்கின்றன; துணை இல்லை துணையும் இல்லை; இணை முலை என் இள மார்பகங்கள்; வேகின்றதால் வேகின்றதே ஐயோ என் செய்வேன்; ஆயன் வேயினுக்கு கண்ணனின் குழலிசைக்கு; அழிகின்றது உள்ளமும் ஏங்குகின்றது உள்ளம்; அஞ்சேல் பயப்படாதே என்று; என்பார் இலையே! சொல்பவர்களும் இல்லையே