PT 8.5.10

இவற்றைப் படிப்போர் தேவரோடு சேர்வர்

1697 வார்கொள்மென்முலைமடந்தையர் தடங்கடல்வண்ணனைத்தாள்நயந்து *
ஆர்வத்தால்அவர்புலம்பியபுலம்பலை அறிந்துமுன்உரைசெய்த *
கார்கொள்பைம்பொழில்மங்கையர்காவலன் கலிகன்றியொலிவல்லார் *
ஏர்கொள்வைகுந்தமாநகர்புக்கு இமையவரோடும்கூடுவரே. (2)
1697 ## vār kŏl̤ mĕṉ mulai maṭantaiyar *
taṭaṅkaṭal vaṇṇaṉait tāl̤ nayantu, *
ārvattāl avar pulampiya
pulampalai * aṟintu muṉ urai cĕyta, **
kār kŏl̤ paim pŏzhil maṅkaiyar
kāvalaṉ * kalikaṉṟi yŏli vallār, *
erkŏl̤ vaikunta mānakar
pukku * imaiyaroṭum kūṭuvare - 10

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1697. Kaliyan the chief of Thirumangai surrounded by beautiful cloud-covered groves composed pāsurams describing the love pain of a young woman whose soft breasts are tied with a band, how she prattled in her love for the ocean-colored lord. If devotees learn and sing these pāsurams on kannapuram, they will reach beautiful Vaikuntam and stay with the gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வார் கொள் கச்சு அணிந்த; மென் முலை மார்பகங்களையுடைய; மடந்தையர் அப்பெண்கள்; தடங் கடல் பெரிய கடலின் நிறத்தை ஒத்த; வண்ணனை கண்ணனின்; தாள் நயந்து திருவடிகளை ஆசைப்பட்டு; ஆர்வத்தால் ஆர்வத்தால்; அவர் புலம்பிய காதலில் அவர் முன்பு புலம்பின; புலம்பலை புலம்பலை; கார் கொள் மேக ஸஞ்சாரத்தையும்; பைம் பொழில் பரந்தசோலைகளையுடைத்தான; மங்கையர் திருமங்கை நாட்டிலுள்ளார்க்கு; காவலன் தலைவரான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; அறிந்து முன் அறிந்து முன்பு; ஒலி ஒலியுடைய பாசுரங்களை; உரை செய்த அருளிச் செய்தவைகளை; வல்லார் ஓதி உணர வல்லவர்கள்; ஏர் கொள் வைகுந்த அழகிய வைகுந்த; மா நகர் புக்கு மா நகரில் புகுந்து; இமையவரொடும் தேவர்களோடு; கூடுவரே! கூடுவர்கள்