தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன் சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு மந்த மாருதம் வனமுலை தட வந்து வலி செய்வது ஒழியாதே —8-5-1-
தமியேன்-தனியேன் இணைக் கூற்றங்கள் -சந்திரனும் மாருதமும் இங்கு
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன் சிந்தை போயிற்று – பிறரால்