PT 8.3.7

உலகமுண்டானால் என் ஒளிவளைகள் ஒழிந்தன

1674 வண்டமரும்மலர்ப்புன்னை வரிநீழல்அணிமுத்தம் *
தெண்திரைகள்வரத்திரட்டும் திருக்கண்ணபுரத்துறையும் *
எண்திசையும்எழுசுடரும் இருநிலனும்பெருவிசும்பும் *
உண்டுமிழ்ந்தபெருமானுக்கு இழந்தேன்என்னொளிவளையே.
1674 vaṇṭu amarum malarp puṉṉai * vari nīzhal aṇi muttam *
tĕṇ tiraikal̤ varat tiraṭṭum * tirukkaṇṇapurattu uṟaiyum **
ĕṇ ticaiyum ĕzhu cuṭarum * iru nilaṉum pĕru vicumpum *
uṇṭu umizhnta pĕrumāṉukku * izhanteṉ-ĕṉ ŏl̤i val̤aiye-7

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1674. She says, “My shining bangles grow loose and fall from my arms because I love the dear lord who swallowed all the eight directions, the sun and moon, the large earth and the wonderful sky and spat them all out. He stays in Thirukkannapuram where clear waves bring beautiful pearls and pile them up in the shadow of Punnai trees blooming with blossoms where bees swarm. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு அமரும் வண்டு அமரும்; மலர் மலர்களையுடைய; புன்னை புன்னை மரத்தின்; வரி நீழல் இருண்ட நிழலில்; அணி முத்தம் அழகிய முத்துக்களை; தெண் திரைகள் தெளிந்த அலைகள்; வரத் திரட்டும் கொண்டு வந்து சேர்க்கும்; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; எண் திசையும் எட்டு திசைகளையும்; எழு சுடரும் ஒளிமயமான ஏழு சூரியனையும்; இரு நிலனும் பரந்த பூமியையும்; பெரு விசும்பும் பெரிய ஆகாசத்தையும்; உண்டு பிரளயத்தில் உண்டு; உமிழ்ந்த பின்பு ச்ருஷ்ட்டியில் உமிழ்ந்த; பெருமானுக்கு பெருமானுக்கு; என் ஒளி எனது அழகிய ஒளிமயமான; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்