PT 8.3.4

கண்ணபிரானால் என் பொன் வளைகள் போய்விட்டன

1671 கணமருவுமயிலகவு கடிபொழில்சூழ்நெடுமறுகில் *
திணமருவுகனமதிள்சூழ் திருக்கண்ணபுரத்துறையும் *
மணமருவுதோளாய்ச்சி ஆர்க்கப்போய் * உரலோடும்
புணர்மருதம்இறநடந்தாற்குஇழந்தேன்என்பொன்வளையே.
1671 kaṇam maruvum mayil akavu * kaṭi pŏzhil cūzh nĕṭu maṟukiṉ *
tiṇam maruvu kaṉa matil̤ cūzh * tirukkaṇṇapurattu uṟaiyum **
maṇam maruvu tol̤ āycci * ārkka poy uraloṭum *
puṇar marutam iṟa naṭantāṟku * izhanteṉ-ĕṉ pŏṉ val̤aiye-4

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1671. She says, “My golden bangles grow loose and fall from my arms because I love the lord who was tied to a grinding stone by the lovely-armed cowherdess Yashodā when she became angry with him. He pulled that stone, going through and destroying the marudam trees whose form the Asurans had assumed. He stays in Thirukannapuram with long streets surrounded by strong walls and fragrant groves where groups of beautiful peacocks dance. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கணம் மருவும் கூட்டம் கூட்டமாக; மயில் அகவு மயில்கள் ஆட; கடி மணம் மிக்க; பொழில் சூழ் சோலைகளால் சூழ்ந்த; நெடு மறுகின் பெரிய வீதிகளையுடைய; திணம்மருவு திடமான அடர்ந்த; கன மதிள் சூழ் கனமான மதிள்களால் சூழ்ந்த; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; மணம் மருவு மணம் மிக்க; தோள் ஆய்ச்சி தோள்களையுடைய ஆய்ச்சி; ஆர்க்க கட்டி வைக்க; உரலோடும் போய் உரலோடு போய்; புணர் மருதம் இரட்டை மருதமரங்கள்; இற இற்று விழும்படி; நடந்தாற்கு நடந்த பெருமானுக்கு; என் பொன் எனது அழகிய பொன்; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்