PT 8.3.2

என் கனமான வளைகளை இழந்துவிட்டேன்

1669 அரிவிரவுமுகிற்கணத்தால் அகிற்புகையால்வரையோடும் *
தெரிவரியமணிமாடத் திருக்கண்ணபுரத்துறையும் *
வரியரவினணைத்துயின்று மழைமதத்தசிறுதறுகண் *
கரிவெருவமருப்பொசித்தாற்கு இழந்தேனென்கனவளையே.
1669 ari viravu mukil kaṇattāl * akil pukaiyāl varaiyoṭum *
tĕrivu ariya maṇi māṭat * tirukkaṇṇapurattu uṟaiyum **
vari araviṉ aṇait tuyiṉṟu * mazhai matatta ciṟu taṟu kaṇ *
kari vĕruva maruppu ŏcittāṟku * izhanteṉ-ĕṉ kaṉa val̤aiye-2

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1669. She says, “ My bangles grow loose and fall from my arms because I love him who rests on the ocean on the snake bed of Adisesha, and who terrified the elephant Kuvalayābeedam that had small heroic eyes and shed rut like rain and broke its tusks. He stays in Thirukannapuram filled with beautiful palaces where the smoke of fragrant akil wood rises up and touches the top of the hills where clouds float in the sky. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரி விரவு முகில் கறுத்த மேக; கணத்தால் கூட்டங்களாலும்; அகில் புகையால் அகில் புகைகளாலும்; வரையோடும் மலைகளுக்கும்; மணி மணிமயமான; மாட தெரிவு மாளிகைகளுக்கும் வித்யாசம்; அரிய பார்க்க முடியாத; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; வரி அரவின் வரியுடைய ஆதிசேஷன்; அணைத் துயின்ற மீது துயின்ற; மழை மதத்த சிறு மழைபோல் பெருகும்; தறுகண் மதஜலத்தையுடைய; கரி சீறிய கோபப் பார்வையுடைய; வெருவ குவலயாபீட யானை அஞ்சும்படி; மருப்பு அதன் தந்தத்தை; ஒசித்தாற்கு முறித்த பெருமானுக்கு; என் கன எனது அழகிய கனமான; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்