PT 8.2.9

என் மகள் இன்னும் பருவம்கூட அடையவில்லையே!

1666 முள்ளெயிறேய்ந்தில கூழைமுடிகொடா *
தெள்ளியளென்பதோர்தேசிலள் என்செய்கேன்? *
கள்ளவிழ்சோலைக் கணபுரம்கைதொழும்
பிள்ளையை * பிள்ளையென்றெண்ணப்பெறுவரே?
1666 mul̤ ĕyiṟu eyntila * kūzhai muṭikŏṭā *
tĕl̤l̤iyal̤ ĕṉpatu or * tecu ilal̤ ĕṉ cĕykeṉ **
kal̤ avizh colaik * kaṇapuram kai tŏzhum
pil̤l̤aiyai * pil̤l̤ai ĕṉṟu ĕṇṇap pĕṟuvare?-9

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

1666. “My daughter does not have all her teeth yet. Her hair has not yet grown thick and you can’t say that she understands things. What can I do? She wants to see the god in Thirukkannapuram filled with groves blooming with flowers that drip honey. How can I think this child is really innocent?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எயிறு முள் எல்லா பற்களும் என் பெண்ணுக்கு; ஏய்ந்தில முளைத்தபாடில்லை; கூழை முடி கூந்தலும் முடியும்படி; கொடா வளரவில்லை; தெள்ளியல் விவேகமுடையவள்; என்பது என்று சொல்லும்படி; ஓர் தேசு தேஜஸ்ஸை; இலள் உடையவள் அல்லள்; என் செய்கேன்! என் செய்கேன்; கள் அவிழ் தேன் பெருகும்; சோலை சோலை சூழ்ந்த; கணபுரம் திருக்கண்ணபுரத்தை; கை தொழும் கையெடுத்து வணங்கும்; பிள்ளை பிள்ளையை; பிள்ளையைப் என்று தான் பெற்ற பிள்ளையென்று; எண்ண பெறுவரே எண்ண பெறுவரோ?