PT 8.2.7

என் மகள் எவ்வளவு ஏங்கிவிட்டாள்!

1664 தரங்கநீர்பேசினும் தண்மதிகாயினும் *
இரங்குமோ? எத்தனைநாளிருந்துஎள்கினாள்? *
துரங்கம்வாய்கீண்டுகந்தானது தொன்மையூர் *
அரங்கமே யென்பது இவள்தனக்குஆசையே. (2)
1664 taraṅka nīr peciṉum * taṇ mati kāyiṉum *
iraṅkumo? * ĕttaṉai nāl̤ iruntu ĕl̤kiṉāl̤ **
turaṅkam vāy kīṇṭu ukantāṉ * atu tŏṉmai * ūr
araṅkame ĕṉpatu * ival̤-taṉakku ācaiye-7

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

1664. “If my daughter hears the sound of the rolling waves of the ocean or sees the cool moon that shines bright she feels distress. She has been suffering like this for many days. She always says her only wish is to go to ancient Srirangam (on Kannapuram) where the god stays who split open the mouth of the Asuran when he came as a horse. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தரங்க நீர் பேசினும் அலை கடல் ஒலித்தாலும்; தண்மதி காயினும் குளிர்ந்த சந்திரன் காய்ந்தாலும்; இரங்குமோ? இவள் இளைப்பாளோ?; எத்தனை நாள் எத்தனை நாட்களாக; இருந்து ஈடுபட்டுள்ளாள்; எள்கினாள்! ஏற்கனவே இளைத்துவிட்டாள்; துரங்கம் குதிரை வடிவாக வந்த அசுரனுடைய; வாய் கீண்டு வாயைக் கிழித்தெறிந்த; உகந்தானது மகிழ்ந்த பெருமானுடைய; தொன்மை ஊர் தொன்மையான ஊர்; அரங்கமே திருவரங்கம் என்று; என்பது சொல்லிக்கொண்டிருப்பதே; இவள் இவளுடைய; தனக்கு ஆசையே ஆசையாயிருக்கிறது