PT 8.2.4

என் மகள் ஊணும் உறக்கமும் ஒழிந்தாள்

1661 உண்ணும்நாளில்லை உறக்கமுந்தானில்லை *
பெண்மையும் சாலநிறைந்திலள் பேதைதான் *
கண்ணனூர் கண்ணபுரம்தொழும், கார்க்கடல்
வண்ணர்மேல் * எண்ணம்இவட்கு இதுஎன்கொலோ?
1661 uṇṇum nāl̤ illai * uṟakkamum-tāṉ illai *
pĕṇmaiyum cāla * niṟaintilal̤ petai-tāṉ **
kaṇṇaṉ ūr kaṇṇapuram * tŏzhum kārk kaṭal
vaṇṇarmel * ĕṇṇam ivaṭku itu ĕṉkŏlo?-4

Ragam

Saindhavi / ஸைந்தவி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1661. “My daughter doesn’t eat all day. She doesn’t sleep. She is innocent and young, not old enough to fall in love yet. He is worshiped by all in Kannapuram. How could she fall in love with the dark ocean-colored Kannan? Why does she do this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உண்ணும் நாள் இல்லை இவள் ஒருநாளும் உண்பதில்லை; உறக்கமும் தான் இல்லை உறங்குவதுமில்லை; பெண்மையும் சால நன்றாக முதிர்ந்த பெண்மை; நிறைந்து இலள் பருவமுடையவள் அல்லள்; பேதை தான் இளம் பெண்தான்; கண்ணன் ஊர் கண்ணனின் ஊராகிய; கண்ணபுரம் தொழும் கண்ணபுரம் தொழுகிறாள்; எண்ணம் இவட்கு இவளுடைய எண்ணம் எல்லாம்; கார்க் கடல் கருத்த கடல் போன்ற; வண்ணர்மேல் நிறத்தை உடைய பெருமான் மேல் தான்; இது என் கொலோ! இது என்ன ஆச்சரியம்!