PT 8.10.6

உன் அடியாரை யமதூதர் நெருங்கமாட்டார்

1743 ஏத்திஉன்சேவடி எண்ணியிருப்பாரை *
பார்த்திருந்துஅங்கு நமன்தமர்பற்றாது *
சோத்தநாமஞ்சுதும்என்று தொடாமைநீ
காத்திபோல் * கண்ணபுரத்துறையம்மானே!
1743 etti uṉ cevaṭi * ĕṇṇi iruppārai *
pārttiruntu aṅku * namaṉ-tamar paṟṟātu **
cottam nām añcutum ĕṉṟu * tŏṭāmai nī
kāttipol- * kaṇṇapurattu uṟai ammāṉe-6

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1743. I found and stayed with your devotees who praise your divine feet and think of you alone. I worship you. I am afraid that the messengers of Yama will come and take me. Protect me and keep them from coming to me and putting their hands on me. O father, god of Kannapuram.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறை அம்மானே! இருக்கும் பெருமானே!; உன் சேவடி உன் திருவடிகளை; ஏத்தி வணங்கி; இருப்பாரை தொண்டு புரிய; எண்ணி நினைப்பவர்களை; பார்த்திருந்து இறுதி காலத்தில்; நமன் தமர் யமதூதர்கள்; அங்கு பற்றாது அங்கு வந்து அணுகாமல்; சோத்தம் ‘நமஸ்காரம்; நாம் அஞ்சுதும் நாம் பயப்படுகிறோம்’; என்று என்று நினைத்து; தொடாமை தொடாமல்; நீ காத்திபோல் நீ காத்தருள்கிறாயன்றோ