PT 8.10.4

கண்ணனே! உன்னை நான் உகந்தேன்

1741 பெண்ணானாள் பேரிளங்கொங்கையினாரழல்போல் *
உண்ணாநஞ்சுண்டுகந்தாயை உகந்தேன்நான் *
மண்ணாளா! வாள்நெடுங்கண்ணி மதுமலராள்
கண்ணாளா! * கண்ணபுரத்துறையம்மானே!
1741 pĕṇ āṉāl̤ * per il̤aṅ kŏṅkaiyiṉ ār azhalpol *
uṇṇā nañcu uṇṭu ukantāyai * ukanteṉ nāṉ- **
maṇ āl̤ā vāl̤ nĕṭuṅ kaṇṇi * matu malarāl̤
kaṇṇāl̤ā * kaṇṇapurattu uṟai ammāṉe-4

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1741. You drank the fire-like poisonous milk from the devil Putanā’s young breasts and killed her. You, the beloved of Lakshmi with long, sharp sword-like eyes who stays on a lotus that drips honey, are auspicious and I worship you (lord of kannapuram) happily.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண் ஆளா! பூமாதேவியின் மணாளனே!; வாள் நெடும் ஒளிபொருந்திய பெரிய; கண்ணி கண்களையுடையவளும்; மது மலராள் தேனுள்ள மலரில் பிறந்தவளுமான; கண்ணாளா ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு நாயகனே!; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறை அம்மானே! இருக்கும் பெருமானே!; பெண் பெண்வடிவுடன் வந்த; ஆனாள் பூதனையின்; பேர் இளங்கொங்கையின் பெரிய ஸ்தநத்திலுள்ள; ஆர் அழல் போல் நெருப்புப்போன்ற; உண்ணா நஞ்சு உண்ணமுடியாத விஷத்தை; உண்டு உகந்தாயை உண்டு உகந்த; நான் உன்னை நான்; உகந்தேன் உகந்து மகிழ்ந்தேன்