PT 8.10.1

பெருமானே! எனக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?

1738 வண்டார்பூமாமலர்மங்கை மணநோக்க
முண்டானே! * உன்னைஉகந்துகந்து உன்தனக்கே
தொண்டானேற்கு * என்செய்கின்றாய்? சொல்லு நால்வேதம்
கண்டானே! * கண்ணபுறத்துறையம்மானே! (2)
1738 ## vaṇṭu ār pū mā malar-maṅkai * maṇa nokkam
uṇṭāṉe!- * uṉṉai ukantu-ukantu * uṉ-taṉakke
tŏṇṭu āṉeṟku ** ĕṉ cĕykiṉṟāy? cŏllu- * nālvetam
kaṇṭāṉe * kaṇṇapurattu uṟai ammāṉe-1

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1738. You are the beloved of the beautiful Lakshmi on a lovely lotus swarming with bees. I worshiped and worshiped you happily and became your devotee. What can you do for me? Tell me. You who created the four Vedās, O lord of Thirukkannapuram.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு ஆர் வண்டுகள் நிறைந்த அழகிய; மா மலர் சிறந்த தாமரைப் பூவில் பிறந்த; மங்கை திருமகளின்; மண நோக்கம் மங்கள பார்வையை; உண்டானே! உடையவனே!; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறை அம்மானே! இருக்கும் பெருமானே!; நால் வேதம் நான்கு வேதங்களையும்; கண்டானே! அருளினவனே!; உன்னை உகந்து உன்னையே மிகவும் உகந்து; உகந்து உன் தனக்கே உகந்து உனக்கே; தொண்டு அடிமை செய்யவேண்டும்; ஆனேற்கு என்கிற எனக்கு; என் செய்கின்றாய்? என்செய்வதாக இருக்கிறாய்?; சொல்லு என்பதைச் சொல்லவேண்டும்