Chapter 10

Thirukkannapuram 10 - (வண்டு ஆர்)

திருக்கண்ணபுரம் 10
Thirukkannapuram 10 - (வண்டு ஆர்)
The āzhvār expresses that he is unable to contemplate or think of anyone other than the Lord of Thirukannapuram, Sowriraja Perumal. He reveals his exclusive devotion and the state of his mind that is wholly captivated by the Lord alone.
திருக்கண்ணபுரத்துப் பெருமானைத் தவிர வேறு யாரையும் தம் மனத்தால் சிந்தித்துப் பார்க்கமுடியாத நிலையை ஆழ்வார் ஈண்டுப் புலப்படுத்துகிறார்.
Verses: 1738 to 1747
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will go to Vaikuṇṭam and rule the skys
  • PT 8.10.1
    1738 ## வண்டு ஆர் பூ மா மலர் மங்கை * மண நோக்கம்
    உண்டானே! * உன்னை உகந்து உகந்து * உன் தனக்கே
    தொண்டு ஆனேற்கு ** என் செய்கின்றாய்? சொல்லு * நால்வேதம்
    கண்டானே * கண்ணபுரத்து உறை அம்மானே 1
  • PT 8.10.2
    1739 பெரு நீரும் விண்ணும் * மலையும் உலகு ஏழும் *
    ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய * நின்னை அல்லால் **
    வரு தேவர் மற்று உளர் என்று * என் மனத்து இறையும்
    கருதேன் நான் * கண்ணபுரத்து உறை அம்மானே 2
  • PT 8.10.3
    1740 ## மற்றும் ஓர் தெய்வம் உளது என்று * இருப்பாரோடு
    உற்றிலேன் * உற்றதும் * உன் அடியார்க்கு அடிமை **
    மற்று எல்லாம் பேசிலும் * நின் திரு எட்டு எழுத்தும்
    கற்று * நான் கண்ணபுரத்து உறை அம்மானே 3
  • PT 8.10.4
    1741 பெண் ஆனாள் * பேர் இளங் கொங்கையின் ஆர் அழல்போல் *
    உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை * உகந்தேன் நான் **
    மண் ஆளா வாள் நெடுங் கண்ணி * மது மலராள்
    கண்ணாளா * கண்ணபுரத்து உறை அம்மானே 4
  • PT 8.10.5
    1742 பெற்றாரும் சுற்றமும் * என்று இவை பேணேன் நான் *
    மற்று ஆரும் பற்று இலேன் * ஆதலால் நின் அடைந்தேன் **
    உற்றான் என்று உள்ளத்து வைத்து * அருள்செய் கண்டாய் *
    கற்றார் சேர் * கண்ணபுரத்து உறை அம்மானே 5
  • PT 8.10.6
    1743 ஏத்தி உன் சேவடி * எண்ணி இருப்பாரை *
    பார்த்திருந்து அங்கு * நமன் தமர் பற்றாது **
    சோத்தம் நாம் அஞ்சுதும் என்று * தொடாமை நீ
    காத்திபோல் * கண்ணபுரத்து உறை அம்மானே 6
  • PT 8.10.7
    1744 வெள்ளை நீர் வெள்ளத்து * அணைந்த அரவு அணைமேல் *
    துள்ளு நீர் மெள்ளத் * துயின்ற பெருமானே **
    வள்ளலே உன் தமர்க்கு என்றும் * நமன்தமர்
    கள்ளர்போல் * கண்ணபுரத்து உறை அம்மானே 7
  • PT 8.10.8
    1745 மாண் ஆகி * வையம் அளந்ததுவும் வாள் அவுணன் *
    பூண் ஆகம் கீண்டதுவும் * ஈண்டு நினைந்து இருந்தேன் **
    பேணாத வல்வினையேன் * இடர் எத்தனையும்
    காணேன் நான் * கண்ணபுரத்து உறை அம்மானே 8
  • PT 8.10.9
    1746 நாட்டினாய் என்னை * உனக்கு முன் தொண்டு ஆக *
    மாட்டினேன் அத்தனையே கொண்டு * என் வல்வினையை **
    பாட்டினால் உன்னை * என் நெஞ்சத்து இருந்தமை
    காட்டினாய் * கண்ணபுரத்து உறை அம்மானே 9
  • PT 8.10.10
    1747 ## கண்ட சீர்க் * கண்ணபுரத்து உறை அம்மானை *
    கொண்ட சீர்த் தொண்டன் * கலியன் ஒலி மாலை **
    பண்டமாய்ப் பாடும் * அடியவர்க்கு எஞ்ஞான்றும் *
    அண்டம் போய் ஆட்சி * அவர்க்கு அது அறிந்தோமே 10