PT 7.8.9

சக்கரபாணி ஆமருவியப்பன்தான்

1626 ஊடேறுகஞ்சனொடுமல்லும்வில்லும்
ஒண்கரியும்உருள்சகடும்உடையச்செற்ற *
நீடேறுபெருவலித்தோளுடையவென்றி
நிலவுபுகழ்நேமியங்கைநெடியோன்காண்மின் *
சேடேறுபொழில்தழுவும் எழில்கொள்வீதித்
திருவிழவில்மணியணிந்த திண்ணைதோறும் *
ஆடேறுமலர்க்குழலார்பயிலும் செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1626 ūṭu eṟu kañcaṉŏṭu mallum villum *
ŏṇ kariyum urul̤ cakaṭum uṭaiyac cĕṟṟa *
nīṭu eṟu pĕru valit tol̤ uṭaiya vĕṉṟi *
nilavu pukazh nemi aṅkai nĕṭiyoṉ kāṇmiṉ- **
ceṭu eṟu pŏzhil tazhuvum ĕzhil kŏl̤ vītit *
tiruvizhavil maṇi aṇinta tiṇṇaitoṟum *
āṭu eṟu malark kuzhalār payilum cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-9

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1626. See, the tall wide-shouldered lord, the god of the gods, famous and victorious holding a discus in his beautiful hand, fought with the evil Kamsan and conquered the wrestlers sent by him, fought with the strong elephant Kuvalayābeedam and killed Sakatāsuran when he came as a cart. He stays happily in beautiful rich Thiruvazhundur with young groves and beautiful streets where the porches are studded with jewels and lovely women adorned with flowers in their hair learn dancing on those porches at festival times.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சேடு ஏறு இளம்; பொழில் தழுவும் சோலைகளால் சூழ்ந்த; எழில் கொள் அழகிய; வீதி தெருக்களிலே நடக்கின்ற; திருவிழவில் விழாக்களில்; மணி அணிந்த ரத்நங்கள் பதிக்கப்பெற்ற; திண்ணை தோறும் திண்ணைகளிலெல்லாம்; ஆடு ஏறு மணம் மிக்க; மலர் மலர்கள் அணிந்த; குழலார் கூந்தலுடைய பெண்கள்; பயிலும் செல்வத்து இருக்கும் சிறப்பான; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; ஊடு ஏறு மஞ்சத்தின் மத்தியில் ஏறியுள்ள; கஞ்சனோடு கம்ஸனும்; மல்லும் வில்லும் மல்லர்களும் வில்லும்; ஒண் கரியும் அழகிய யானையும்; உருள் சகடும் உருண்டு ஓடும் சகடமும்; உடையச் செற்ற உடையும்படி அழித்திட்ட; நீடு ஏறு பெரு நீண்டு உயர்ந்த பெரிய; வலி வலிமையுடைய; தோள் தோள்களையுடையவனும்; உடைய வென்றி வெற்றியினால்; நிலவு புகழ் புகழுடையவனுமான; நேமி அம் கை அழகிய சக்கர கைகளையுடைய; நெடியோன் நெடியோனை; காண்மின் கண்டு களியுங்கள்