PT 7.8.4

வராகாவதாரம் எடுத்தவன் இவனே

1621 சிலம்புமுதல்கலனணிந்தோர்செங்கண்குன்றம்
திகழ்ந்ததெனத்திருவுருவம்பன்றியாகி *
இலங்குபுவிமடந்தைதனை இடந்துபுல்கி
எயிற்றிடைவைத்தருளியஎம்மீசன்காண்மின் *
புலம்புசிறைவண்டொலிப்பப்பூகம்தொக்க
பொழில்கள்தொறும்குயில்கூவமயில்களால *
அலம்புதிரைப்புனல்புடைசூழ்ந்துஅழகார் செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1621 cilampu mutal kalaṉ aṇintu or cĕṅkaṇ kuṉṟam *
tikazhntatu ĕṉat tiru uruvam paṉṟi āki *
ilaṅku puvi maṭantai-taṉai iṭantu pulki *
ĕyiṟṟiṭai vaittarul̤iya ĕm īcaṉ kāṇmiṉ **
pulampu ciṟai vaṇṭu ŏlippap pūkam tŏkka *
pŏzhilkal̤tŏṟum kuyil kūva mayilkal̤ āla *
alampu tiraip puṉal puṭai cūzhntu azhaku ār cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-4

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1621. He took the divine form of a strong-eyed boar that looked like a hill decorated with anklets and ornaments and dug up the earth and brought up the shining earth goddess on his tusks. See, he is the king of the gods who stays in beautiful rich Thiruvazhundur surrounded with water where areca nut trees grow and winged bees sing in the groves as cuckoo birds coo and peacocks dance.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூகம் தொக்க பாக்கு மரங்கள் நிறைந்துள்ள; பொழில்கள் தொறும் சோலைகளெங்கும்; குயில் கூவ குயில் கூவ; மயில்கள் ஆல மயில்கள் ஆட; புலம்பு சிறை சிறகுகளையுடைய; வண்டு ஒலிப்ப வண்டுகள் ரீங்கரிக்க; அலம்பு திரைப் அலைகளையுடைய; புனல் காவேரி நீர்; புடை சூழ்ந்து எல்லா இடங்களிலும் சூழ்ந்து பாய; அழகு ஆர் செல்வத்து அழகு மிக்க சிறப்புடைய; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்து நின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; ஓர் செங்கண் சிவந்த கண்களையுடைய; குன்றம் ஒரு மலை; திகழ்ந்தது என இருப்பது போல்; சிலம்பு முதல் தண்டை சிலம்பு முதலான; கலன் அணிந்து ஆபரணங்களை அணிந்து; திருவுருவம் பன்றி ஆகி வராஹரூபமாக; இலங்கு விளங்கும்; புவி மடந்தை தனை பூமாதேவியை; இடந்து அண்டத்திலிருந்து; புல்கி குத்தி எடுத்து அணைத்து; எயிற்றிடை பற்களினிடையே; வைத்தருளிய வைத்தருளிய; எம் ஈசன் எம்பெருமானை; காண்மின் கண்டு களியுங்கள்