PT 7.8.3

கஜேந்திரனுக்கு அருளியவன் இவனே

1620 குலத்தலையமதவேழம்பொய்கைபுக்குக்
கோள்முதலைபிடிக்கஅதற்குஅனுங்கிநின்று *
நிலத்திகழும்மலர்ச்சுடரேய்சோதீ! என்ன
நெஞ்சிடர்தீர்த்தருளியஎன்நிமலன்காண்மின் *
மலைத்திகழ்சந்தகில்கனகமணியும்கொண்டு
வந்துந்திவயல்கள்தொறும்மடைகள்பாய *
அலைத்துவரும்பொன்னிவளம்பெருகும்செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1620 kulat talaiya mata vezham pŏykai pukkuk *
kol̤ mutalai piṭikka ataṟku aṉuṅki niṉṟu *
nilat tikazhum malarc cuṭar ey cotī ĕṉṉa *
nĕñcu iṭar tīrttarul̤iya ĕṉ nimalaṉ kāṇmiṉ- **
malait tikazh cantu akil kaṉakam maṇiyum kŏṇṭu *
vantu unti vayalkal̤tŏṟum maṭaikal̤ pāya *
alaittu varum pŏṉṉi val̤am pĕrukum cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-3

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1620. When the strong crocodile caught Gajendra, the king of elephants, he called to you loudly, saying, “You are the shining light of the world, as bright as its flowers, ” and you, faultless, went and saved him and gave him your grace. See, you are the god of the gods and you stay happily in beautiful Thiruvazhundur where the Ponni river brings fragrant sandalwood from the mountains along with gold and jewels as it fills the fields and the channels with water and increases the richness of the place.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மலை மலையிலிருந்து; திகழ் சந்து சந்தன மரங்களையும்; அகில் அகில் கட்டைகளையும்; கனகம் பொன்னையும்; மணியும் கொண்டு மணியையும்; உந்தி வந்து தள்ளிக் கொண்டு வந்து; வயல்கள்தொறும் வயல்களிலெல்லாம்; மடைகள் பாய நீர்பாயும்; அலைத்து அலைகளோடு; வரும் பொன்னி வரும் காவேரி; வளம் பெருகும் வளம் பெருகும்; செல்வத்து செல்வத்தையுடைய; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; குலத் தலைய நல்ல குலத்தில் பிறந்த; மதவேழம் யானை; பொய்கை பொய்கையில்; புக்கு புகுந்தபோது; கோள் வலிமையுள்ள; முதலை பிடிக்க முதலை பிடித்ததினால்; அதற்கு அம்முதலைக்கு; அனுங்கி நின்று பயந்து நின்று; நிலத் திகழும் நிலா பரவிய; மலர் சந்திரனை ஒத்த; சுடர் ஏய் சோதீ! ஒளிமயமானவனே!; என்ன என்று துதிக்க; நெஞ்சு இடர் யானையின் துன்பத்தை; தீர்த்தருளிய போக்கிய; என் நிமலன் என் குற்றமற்ற பெருமனை; காண்மின் கண்டு களியுங்கள்