தேவாதி ராஜனே இவர் அமரர் கோவே என்றும் பலகாலும் அருளிச் செய்கிறார் – பாற் கடல் ஷீராப்தி நாதன் அனுபவம் =கீழ் அங்கு நின்றும் போந்து விபாவமான ஹயக்ரீவன் இதில் வேத பிரதானம் செய்து அருளி
முன்னிவ் வுலகேழும் இருள் மண்டி யுண்ண முனிவரோடு தாநவர்கள் திசைப்ப வந்து பன்னு கலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய வெம் பரமன் காண்மின் செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் சங்க மவை முரலச்