PT 7.8.10

இவற்றைப் பாடினால் உலகை ஆளலாம்

1627 பன்றியாய்மீனாகிஅரியாய்ப் பாரைப்
படைத்துக்காத்துண்டுமிழ்ந்தபரமன்தன்னை *
அன்றுஅமரர்க்கதிபதியும்அயனும்சேயும்
அடிபணிய அணியழுந்தூர்நின்றகோவை *
கன்றிநெடுவேல்வலவன்ஆலிநாடன்
கலிகன்றியொலிசெய்தஇன்பப்பாடல் *
ஒன்றினொடுநான்கும்ஓரைந்தும் வல்லார்
ஒலிகடல்சூழுலகாளும்உம்பர்தாமே. (2)
1627 ## paṉṟi āy mīṉ āki ari āyp * pāraip
paṭaittuk kāttu uṇṭu umizhnta paramaṉ-taṉṉai *
aṉṟu amararkku atipatiyum ayaṉum ceyum *
aṭi paṇiya aṇi azhuntūr niṉṟa kovai **
kaṉṟi nĕṭu vel valavaṉ āli nāṭaṉ *
kalikaṉṟi ŏlicĕyta iṉpap pāṭal *
ŏṉṟiṉŏṭu nāṉkum or aintum vallār *
ŏli kaṭal cūzh ulaku āl̤um umpar-tāme-10

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1627. He, the highest god and the king of the gods, who took the forms of a boar, a fish, and a man-lion and created, protected, swallowed and spat out the world stays in Aniyazundur happily while Indra, the king of the gods, Nānmuhan and Murugan worship his feet. Kaliyan the poet, the strong king of Thiruvāli with a long spear composed ten musical pāsurams on the god of Thiruvazhundur. If devotees learn and recite these ten pāsurams well they will be like gods and rule this world surrounded by the sounding oceans.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று பன்றி ஆய் அன்று வராஹமாகவும்; மீன் ஆகி மீனாகவும்; அரி ஆய் நரசிம்மமாகவும்; பாரை படைத்து உலகை படைத்து; காத்து உண்டு காத்து உண்டு; உமிழ்ந்த உமிழ்ந்த; பரமன் தன்னை எம்பெருமானை; அமரர்க்கு தேவர்களுக்கு; அதிபதியும் தலைவனான இந்திரனும்; அயனும் பிரமனும்; சேயும் அவன் மகன் ருத்ரனும்; அடி உன் திருவடிகளை; பணிய வணங்கும்படி; அணி அழுந்தூர் திருவழுந்தூரில்; நின்ற கோவை நின்ற பெருமானைக் குறித்த; கன்றி நெடு கரை படிந்த நீண்ட; வேல் வேலாயுதத்தை; வலவன் பிடிக்க வல்லவரான; ஆலி நாடன் ஆலி நாடன் என்னும்; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; ஒலி செய்த அருளிச்செய்த; இன்பப் பாடல் இந்த இனிய பாடல்களான; ஒன்றினொடு நான்கும் ஒன்றோடு கூடின நான்கும்; ஓர் ஐந்தும் ஓரைந்துமான பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓத வல்லார்; ஒலி கடல் சூழ் ஒலிக்கின்ற கடலால் சூழ்ந்த; உலகு ஆளும் இவ்வுலகங்களை ஆளவல்ல; உம்பர் தாமே தேவர்களாவர்