PT 7.5.8

எனக்குக் கனவில் காட்சி தந்தனர் ஊர் இது

1595 வஞ்சிமருங்குலிடைநோவ மணந்துநின்றகனவகத்து * என்
நெஞ்சுநிறையக்கைகூப்பிநின்றார் நின்றஊர்போலும் *
பஞ்சியன்னமெல்லடி நற்பாவைமார்கள் ஆடகத்தின் *
அஞ்சிலம்பினார்ப்புஓவா அணியார்வீதிஅழுந்தூரே.
1595 vañci maruṅkul iṭai nova * maṇantu niṉṟa kaṉavakattu * ĕṉ
nĕñcu niṟaiyak kaikūppi * niṉṟār niṉṟa ūrpolum- **
pañci aṉṉa mĕl aṭi * nal pāvaimārkal̤ * āṭakattiṉ
am cilampiṉ ārppu ovā * aṇi ār vīti azhuntūre-8

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1595. The lord who came in the dreams of the women with waists as thin as vines and embraced them as they folded their hands and worshiped him stays in Thiruvazhundur where the sound of the golden anklets on the soft cotton-like feet of women as lovely as statues, never stops.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பஞ்சி அன்ன பஞ்சுபோன்ற மிருதுவான; மெல் அடி பாதங்களையுடைய; நல் பாவைமார்கள் நல்ல பெண்கள்; ஆடகத்தின அணிந்துள்ள அழகிய தங்க; அம் சிலம்பின் சிலம்புகளிலிருந்து; ஆர்ப்பு உண்டான; ஓவா இடைவிடாத ஆரவாரமிருக்கும் ஊர்; அணியார் வீதி அணியார் வீதி; அழுந்தூரே திருவழுந்தூர்; வஞ்சி மருங்குல் இடை வஞ்சிக்கொடிபோன்ற இடை; நோவ தளர்ந்து மெலியும்படி; மணந்து நின்ற என்னுடன் சேர்ந்து நின்ற; கனவகத்து என் கனவு மயமான சேர்க்கையில்; நெஞ்சு நிறைய எனது நெஞ்சு நிறையுமாறு; கைகூப்பி நின்றார் கைகூப்பி நின்றார்; நின்ற ஊர் அப்படி நின்ற பெருமனின் ஊர்; போலும் திருவழுந்தூர் போலும்