PT 7.5.4

என் கண்ணிலும் கருத்திலும் நின்றவர் ஊர் இது

1591 வெள்ளத்துள்ஓராலிலைமேல் மேவிஅடியேன்மனம்புகுந்து * என்
உள்ளத்துள்ளும்கண்ணுள்ளும்நின்றார் நின்றஊர்போலும் *
புள்ளுப்பிள்ளைக்கிரைதேடிப் போனகாதல்பெடையோடும் *
அள்ளல்செறுவில்கயல்நாடும் அணியார்வயல்சூழ்அழுந்தூரே.
1591 vĕl̤l̤attul̤ or āl ilaimel mevi * aṭiyeṉ maṉam pukuntu * ĕṉ
ul̤l̤attul̤l̤um kaṇṇul̤l̤um * niṉṟār niṉṟa ūrpolum- **
pul̤l̤up pil̤l̤aikku irai teṭip * poṉa kātal pĕṭaiyoṭum *
al̤l̤al cĕṟuvil kayal nāṭum * aṇi ār vayal cūzh azhuntūre-4

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1591. Our god who lay on a banyan leaf in the flood and entered my heart so he is always in my eyes stays in Thiruvazhundur surrounded with rich fields where a male bird goes with its beloved mate and searches for food for their fledglings in the wet fields.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காதல் காதலித்த; பெடையோடும் பெடையோடு கூடி; பிள்ளைக்கு குட்டிகளுக்கு; இரை தேடி போன இரைதேடிச் சென்ற; புள்ளு அள்ளல் பறவை சேறு மிக்க; செறுவில் விளை நிலங்களிலே; கயல் நாடும் மீன்களைத் தேடும் ஊர்; அணியார் வயல் சூழ் அணியார் வயல்சூழ்; அழுந்தூரே திருவழுந்தூர்; வெள்ளத்துள் பிரளய வெள்ளதின் போது; ஓர் ஆலிலைமேல் ஓரு ஆலிலைமேல்; மேவி பொருந்தியிருந்து; அடியேன் என் மனம்; புகுந்து என் புகுந்த பெருமான்; உள்ளத்துள்ளும் என் கண்களிணுள்ளும்; கண்ணுள்ளும் மனதினுள்ளும்; நின்றார் நின்ற நிலைத்து நின்ற; ஊர் போலும் ஊர் திருவழுந்தூர்