PT 7.5.1

எம்பெருமான் ஊர் திருவழுந்தூர்

1588 தந்தைகாலில்பெருவிலங்கு தாளவிழ * நள்ளிருட்கண்
வந்தஎந்தைபெருமானார் மருவிநின்றஊர்போலும் *
முந்திவானம்மழைபொழியும் மூவாவுருவின்மறையாளர் *
அந்திமூன்றும்அனலோம்பும் அணியார்வீதிஅழுந்தூரே. (2)
1588 ## tantai kālil pĕru vilaṅku * tāl̤ avizha * nal̤ iruṭkaṇ
vanta ĕntai pĕrumāṉār * maruvi niṉṟa ūrpolum- *
munti vāṉam mazhai pŏzhiyum * mūvā uruviṉ maṟaiyāl̤ar *
anti mūṉṟum aṉal ompum * aṇi ār vīti azhuntūre-1

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1588. When his father Vasudevan was imprisoned by Kamsan, Kannan broke the chains that bound his feet and his father took him to a cowherd village in the middle of the dark night. He stays in Thiruvazhundur filled with beautiful streets where the rain falls without stopping and where Vediyar, never aging, recite the Vedās and light sacrificial fires in the morning, afternoon and evening.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானம் முந்தி மேகம் முன்னமே; மழை பொழியும் மழை பெய்யும்படியாக; மூவா கிழத்தனமற்ற; உருவின் உருவத்தையுடைய; மறையாளர் வைதிகர்கள்; அந்தி மூன்றும் மூன்று காலங்களிலும்; அனல் ஓம்பும் அக்னியிலே ஹோமம் செய்வர்; அணிஆர் அழகுமிக்க; வீதி அழுந்தூரே வீதிகளையுடைய திருவழுந்தூர்; தந்தை காலில் தந்தை காலிலிருந்த; பெரு விலங்கு பெரு விலங்கு; தாள் அவிழ தாளிலிருந்து இற்றுவிழும்படி; நள் இருட்கண் நடு இரவில்; வந்த எந்தை அவதரித்த என் தந்தை; பெருமானார் எம்பெருமான்; மருவி நின்ற விரும்பி நின்ற; ஊர் போலும் ஊர் திருவழுந்தூர்