PT 7.4.9

சாரநாதன் பக்தர்கட்கே என் உள்ளம் உருகும்

1586 கள்ளத்தேன்பொய்யகத்தேனாதலால்
போதொருகால்கவலையென்னும் *
வெள்ளத்தேற்குஎன்கொலோ?
விளைவயலுள்கருநீலம்களைஞர்தாளால்
தள்ள * தேன்மணநாறும்
தண்சேறையெம்பெருமான்தாளை * நாளும்
உள்ளத்தேவைப்பாருக்குஇதுகாணீர்
என்னுள்ளம்உருகுமாறே.
1586 kal̤l̤atteṉ pŏy akatteṉ ātalāl *
potu ŏrukāl kavalai ĕṉṉum *
vĕl̤l̤atteṟku ĕṉkŏlo? * -vil̤ai vayalul̤
karu nīlam kal̤aiñar tāl̤āl
tal̤l̤a ** teṉ maṇam nāṟum * taṇ ceṟai
ĕm pĕrumāṉ tāl̤ai * nāl̤um
ul̤l̤atte vaippārukku itu kāṇīr- *
ĕṉ ul̤l̤am urukum āṟe-9

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1586. My heart melts for the devotees who keep his feet in their hearts and worship the lord of Thiruthancherai where, as the farmers weed in the paddy fields, they crush karuneelam flowers with their feet and the fragrance of the flowers spreads as their honey flows.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விளை வயலுள் பயிர்தழைத்த வயலில்; கரு நீலம் கருநெய்தலை; களைஞர் களை பிடுங்கும் உழவர்களாலே; தாளால் தள்ள காலால் ஒதுக்கித் தள்ள; தேன் மணம் நாறும் தேன்மணம் வீசும்; தண் சேறை குளிர்ந்த திருச்சேறை; எம்பெருமான் பெருமானின்; தாளை நாளும் திருவடிகளை நாள்தோறும்; உள்ளத்தே உள்ளத்தில்; வைப்பாருக்கு வைத்து த்யானிப்பவரைக்குறித்து; என்னுள்ளம் என்மனம் நீர்ப்பண்டமாக; உருகும் உருகும்; ஆறே காணீர் விதத்தைப் பாருங்கள்; கள்ளத்தேன் ஆத்மாவை என்னுடையது என்றும்; பொய் அகத்தேன் பொய்யான மனமுடையவனாக; ஆதலால் இருப்பதால்; போது ஒருகால் ஒரு நொடிப் பொழுதும் இடைவிடாமல்; கவலை யென்னும் துக்கமாகிற பெருங்கடலில்; வெள்ளத்தேற்கு அழுந்திக்கிடந்த எனக்கு; இது இப்படிப்பட்ட பேறு; என் கொலோ? எப்படி உண்டாயிற்றோ?