PT 7.3.8

கண்ணனைக் கண்டு விட்டேன்

1575 இனிஎப்பாவம்வந்தெய்தும்? சொல்லீர்
எமக்குஇம்மையேஅருள்பெற்றமையால் * அடும்
துனியைத்தீர்த்து இன்பமேதருகின்றதோர்
தோற்றத்தொன்னெறியை * வையம்தொழப்படும்
முனியைவானவரால்வணங்கப்படும்
முத்தினைப் பத்தர்தாம்நுகர்கின்றதுஓர்
கனியை * காதல்செய்துஎன்னுள்ளம்கொண்ட
கள்வனை இன்றுகண்டுகொண்டேனே.
1575 iṉi ĕp pāvam vantu ĕytum cŏllīr * ĕmakku-
immaiye arul̤pĕṟṟamaiyāl * aṭum
tuṉiyait tīrttu iṉpame tarukiṉṟatu or *
toṟṟat tŏl nĕṟiyai ** vaiyam tŏzhappaṭum
muṉiyai vāṉavarāl vaṇaṅkappaṭum
muttiṉai * pattar-tām nukarkiṉṟatu or
kaṉiyai * kātal cĕytu ĕṉ ul̤l̤am kŏṇṭa
kal̤vaṉai * iṉṟu kaṇṭukŏṇṭeṉe-8

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1575. Tell me, how can results of any karmā come to me now that I have received the grace of the lord in this birth itself? The Lord of Naraiyur is the creator and the ancient path for all and he removes the sorrows and troubles of all, giving them only joy. He, a sage praised by the whole world, is worshiped by the gods in the sky, and he is Mokshā and a fruit enjoyed by his devotees and a thief who has robbed me of my heart. I found him today.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இம்மையே இந்த லோகத்திலேயே; அருள் பெருமானின் அருள்; பெற்றமையால் பெற்றமையால்; இனி எப் பாவம் இனி எப் பாவம்; எமக்கு வந்து எமக்கு வந்து; எய்தும் சொல்லீர் சேறும் என்று சொல்லுங்கள்; அடும் ஆத்மாவைத் துன்புறுத்தும்; துனியைத் தீர்த்து தீவினைகளைத் தீர்த்து; இன்பமே தருகின்றது இன்பமே தருகின்ற; ஓர் தோற்ற ஒப்பற்ற ஒரு; தொல் நெறியை உபாயமாயிருப்பவனும்; வையம் உலகத்தவர்களால்; தொழப்படும் தொழப்படுபவனும் அவர்களுடைய; முனியை நன்மைகளைச் சிந்திப்பவனும்; வானவரால் தேவர்களால்; வணங்கப்படும் வணங்கப்படுபவனும்; முத்தினை முத்துப்போன்றவனும்; பத்தர் தாம் பக்தர்களால்; நுகர்கின்றது அனுபவிக்கப்படுகின்ற; ஓர் கனியை ஒரு பழம் போன்றவனும்; காதல் செய்து ஆசையுற்று; என் உள்ளம் என் நெஞ்சை; கொண்ட கொள்ளை கொண்ட; கள்வனை கள்ளவனுமான; இன்று பெருமானை இன்று; கண்டு கொண்டேனே கண்டு கொண்டேன்