PT 7.3.1

நறையூர் நம்பியைக் கண்டுகளித்தேன்

1568 சினவில்செங்கண்அரக்கருயிர்மாளச்
செற்றவில்லியென்றுகற்றவர்தந்தம்
மனமுள்கொண்டு * என்றும்எப்போதும்நின்றேத்தும்
மாமுனியை மரமேழெய்தமைந்தனை *
நனவில்சென்றார்க்கும்நண்ணற்கரியானை
நான்அடியேன்நறையூர்நின்றநம்பியை *
கனவிற்கண்டேன்இன்றுகண்டமையால் என்
கண்ணிணைகள்களிப்பக்களித்தேனே. (2)
1568 ## ciṉa il cĕṅ kaṇ arakkar uyir māl̤ac *
cĕṟṟa villi ĕṉṟu kaṟṟavar tamtam
maṉamul̤ kŏṇṭu * ĕṉṟum ĕppotum niṉṟu ettum
mā muṉiyai * maram ezh ĕyta maintaṉai **
naṉavil cĕṉṟu ārkkum naṇṇaṟku ariyāṉai *
nāṉ aṭiyeṉ naṟaiyūr niṉṟa nampiyai *
kaṉavil kaṇṭeṉ iṉṟu kaṇṭamaiyāl * ĕṉ
kaṇ-iṇaikal̤ kal̤ippak kal̤itteṉe-1

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1568. The learned ones praise the Lord of Naraiyur in their minds always saying, “He killed the cruel-eyed Rakshasās with his heroic bow. ” The Nambi who destroyed the seven trees cannot be seen by anyone, but I, his slave, I saw him in a dream and I am very happy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சின இல் கோபத்தினால்; செங்கண் சிவந்த கண்களையுடைய; அரக்கர் உயிர் மாள அரக்கர்கள் அழிய; செற்ற சீறின; வில்லி என்று வில்லையுடையவனே என்று; கற்றவர் தம் தம் கற்றவர்கள் தங்களுடைய; மனமுள் மனதுக்குள்; கொண்டு என்றும் த்யானித்துக் கொண்டு; எப்போதும் எப்போதும் எங்கும் இருந்து கொண்டு; நின்று ஏத்தும் துதிக்கும்படியாக உள்ளவனும்; மா முனியை அடியார்களுக்கு அருள்பவனும்; மரம் ஏழ் ஏழு மரங்களை; எய்த மைந்தனை துளைத்த மைந்தனை; நனவில் சென்று தெளிந்த நிலையிலும்; ஆர்க்கும் ஞானிகளாலும்; நண்ணற்கு அரியானை அறியமுடியாதவனை; நறையூர் நின்ற நம்பியை நறையூர் நின்ற நம்பியை; நான் அடியேன் இன்று தாஸனான நான் இன்று; கனவில் கண்டேன் கனவில் கண்டேன்; கண்டமையால் என் அப்படி கண்டதால் என்; கண் இணைகள் இரண்டு கண்களாலும்; களிப்ப கண்ணார; களித்தேனே! கண்டு களித்தேன்