PT 7.2.7

நம்பீ! நீ பிறர் மனத்தில் புக நான் விடமாட்டேன்

1564 மன்னஞ்ச ஆயிரந்தோள்மழுவில்துணித்தமைந்தா! *
என்னெஞ்சத்துள்ளிருந்து இங்குஇனிப்போய்ப்பிறரொருவர் *
வன்னெஞ்சம்புக்கிருக்கவொட்டேன் வளைத்துவைத்தேன் *
நன்னெஞ்சவன்னம்மன்னும் நறையூர்நின்றநம்பீயோ!
1564 maṉ añca āyiram tol̤ * mazhuvil tuṇitta maintā *
ĕṉ nĕñcattul̤ iruntu * iṅku iṉip poyp piṟar ŏruvar **
val nĕñcam pukku irukka ŏṭṭeṉ * val̤aittu vaitteṉ *
nal nĕñca aṉṉam maṉṉum * naṟaiyūr niṉṟa nampīyo-7

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1564. You cut off the thousand arms of Bānasuran terrifying all other kings when they saw it. You have entered my heart and I will not allow you to go to another person’s evil heart and stay there. I attracted you and have kept you in my heart. You go to stay in the hearts of good people O Nambi, god of Naraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நெஞ்ச நல்ல மனதையுடையவளும்; அன்னம் அன்ன நடையை உடையவளுமான; மன்னும் திருமகளுடன் இருக்கும்; நறையூர் நறையூர்; நின்ற நம்பீயோ! நின்ற நம்பியே!; மன் அஞ்ச மன்னர்கள் அஞ்சும்படி; ஆயிரம்தோள் ஆயிரம் தோள்களை; மழுவில் கோடாலியால்; துணித்த மைந்தா! துணித்த மைந்தா!; என் நெஞ்சத்துள் இருந்து என் மனதிலிருந்து; இங்கு இங்கிருந்து; இனிப் போய் வேறோரிடம்போய்; பிறர் ஒருவர் வேறொருவருடைய; வன் உன் பிரிவால் வருந்தாத வன்மையான; நெஞ்சம் புக்கு நெஞ்சத்தில் புகுந்து; இருக்க ஒட்டேன் இருக்கவிட மாட்டேன்; வளைத்து நீ எங்கும் போகாதபடி; வைத்தேன் தடுத்து வைத்தேன்