PT 7.2.6

நம்பீ! நீ அருள் செய்து கொண்டே இருப்பாய்

1563 எந்தாதைதாதை அப்பால்எழுவர்பழவடிமை
வந்தார் * என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன் *
அந்தோ! என்னாருயிரே! அரசே!அருளெனக்கு *
நந்தாமல்தந்தஎந்தாய்! நறையூர்நின்றநம்பீயோ!
1563 ĕm tātai tātai appāl * ĕzhuvar pazha aṭimai
vantār * ĕṉ nĕñciṉ ul̤l̤e * vantāyaip pokal ŏṭṭeṉ **
anto!-ĕṉ ār uyire * arace arul̤ ĕṉakku *
nantāmal tanta ĕntāy! * naṟaiyūr niṉṟa nampīyo-6

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1563. My father, his father and our ancestors for seven generations and others before them all served you and they were your slaves. You entered my heart and I will not let you go away. You, my dear life, my king, my father, gave your grace to me without refusing, O Nambi, god of Naraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் ஆருயிரே! என் ஆருயிரே!; அரசே! அரசே!; எனக்கு அருள் எனக்கு அருள்; நந்தாமல் தந்த குறைவின்றி தந்த; எந்தாய்! பெருமானே!; எம் தாதை நானும் என் தந்தையும்; தாதை அவர் தந்தையும்; அப்பால் எழுவர் ஏழு தலைமுறையினரும்; பழ அடிமை பழைய கைங்கர்யம்; வந்தார் செய்து வந்தவர்கள்; என் நெஞ்சின் உள்ளே என் நெஞ்சின் உள்ளே; வந்தாயைப் வந்து புகுந்த உன்னை; போகலொட்டேன் போகலொட்டேன்; நறையூர் நறையூர்; நின்ற நம்பீயோ! நின்ற நம்பியே!