PT 7.10.8

பக்தர்களின் தலைமேல் இருப்பவன் பக்தவத்சலன்

1645 வெஞ்சினக்களிற்றைவிளங்காய்வீழக்
கன்றுவீசியஈசனை * பேய்மகள்
துஞ்சநஞ்சுசுவைத்துண்டதோன்றலைத்
தோன்றல்வாளரக்கன்கெடத்தோன்றிய
நஞ்சினை * அமுதத்தினைநாதனை
நச்சுவாருச்சிமேல்நிற்கும்நம்பியை *
கஞ்சனைத்துஞ்சவஞ்சித்தவஞ்சனைக் *
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே.
1645 vĕm ciṉak kal̤iṟṟai vil̤aṅkāy vīzhak *
kaṉṟu vīciya īcaṉai * pey makal̤
tuñca nañcu cuvaittu uṇṭa toṉṟalait *
toṉṟal vāl̤ arakkaṉ kĕṭat toṉṟiya
nañciṉai ** amutattiṉai nātaṉai *
naccuvār uccimel niṟkum nampiyai *
kañcaṉait tuñca vañcitta vañcaṉaik *
kaṇṇamaṅkaiyul̤ kaṇṭukŏṇṭeṉe-8

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1645. He is like an angry elephant threw the Asuran that came as a calf at the vilam fruit that was an Asuran and killed them both, drank the milk from the breasts of the devil Putanā, killed the Rākshasa Rāvana, the king of Lankā who carried a strong sword, and cheated Kamsan and killed him. He is our nectar, our Nambi who protects his loving devotees, and I found him in Thirukannamangai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெம் சினம் கொடிய கோபத்தையுடைய; களிற்றை மதயானை போன்றவனும்; விளங்காய் விளாமரத்தின் காய்கள் உதிர்ந்து; வீழ விளாம்பழ அஸுரனை விழ வைத்தவனை; கன்று கன்றாகவந்த அஸுரனை; வீசிய ஈசனை தூக்கி எறிந்தவனை; பேய்மகள்துஞ்ச பூதனை முடியும்படி அவள்; நஞ்சு சுவைத்து உண்ட விஷப்பாலைப் பருகி உண்ட; தோன்றலை பெருமானை; வாள் அரக்கன் வாளை ஆயுதமாக; தோன்றல் உடைய ராவணன்; கெடத் தோன்றிய முடியும்படி அவதரித்த; நஞ்சினை விஷம் போன்றவனும்; அமுதத்தினை அமுதம் போன்ற; நாதனை எம்பெருமானை; நச்சுவார் தன்னை ஆசைப்படுமவர்களின்; உச்சி மேல் தலைமீது; நிற்கும் நம்பியை நிற்கின்ற நம்பியை பூர்ணனை; கஞ்சனை துஞ்ச கம்சனை முடியும்படி; வஞ்சித்த வஞ்சனை வஞ்சித்த வஞ்சகனுமான பெருமானை; கண்ணமங்கையுள் திருக்கண்ண மங்கையில்; கண்டுகொண்டேனே கண்டுகொண்டேனே