PT 7.10.5

இம்மைக்கும் மறுமைக்கும் மருந்து இவனே

1642 ஏற்றினை இமயத்துளெம்மீசனை
இம்மையைமறுமைக்குமருந்தினை *
ஆற்றலைஅண்டத்தப்புறத்துய்த்திடும்
ஐயனைக்கையிலாழியொன்றேந்திய
கூற்றினை * குருமாமணிக்குன்றினை
நின்றவூர்நின்றநித்திலத்தொத்தினை *
காற்றினைப்புனலைச்சென்றுநாடிக்
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே. (2)
1642 eṟṟiṉai imayattul̤ ĕm īcaṉai *
immaiyai maṟumaikku maruntiṉai *
āṟṟalai aṇṭattu appuṟattu uyttiṭum
aiyaṉai * kaiyil āzhi ŏṉṟu entiya
kūṟṟiṉai ** kuru mā maṇik kuṉṟiṉai *
niṉṟavūr niṉṟa nittilat tŏttiṉai *
kāṟṟiṉaip puṉalaic-cĕṉṟu nāṭik *
kaṇṇamaṅkaiyul̤ kaṇṭukŏṇṭeṉe-5

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1642. I searched for him who is wind and water and found him in Thirukannamangai, the omnipresent lord of the Himalayas, strong as a bull, our strength and the cure for our future, and the giver of Mokshā for his devotees. The lord with a discus in his hand who is Yama for his enemies stays in Thirunindravur, shining like a large beautiful jewel mountain and a string of precious pearls.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏற்றினை காளைபோல் செருக்குடையவனும்; இமயத்துள் இமயமலையில் இருக்கும்; எம் ஈசனை நம் பெருமானை; இம்மையை இந்த லோகத்தின் பலனை அளிப்பவனும்; மறுமைக்கு பரமபதத்துக்கு; மருந்தினை ஸாதனமாயிருப்பவனும்; ஆற்றலை அனைத்து சக்திகளுக்கும் இருப்பிடமாய்; அண்டத்து அண்டங்களுக்கு; அப்புறத்து அப்பாலுள்ள பரமபதத்தில்; உய்த்திடும் ஆச்ரிதரை நடத்த வல்லவனான; ஐயனை பெருமானும்; கையில் ஒன்று ஆழி கையில் ஒப்பற்ற ஒரு சக்கரத்தை; ஏந்திய ஏந்தியவனும்; கூற்றினை பகைவர்க்கு யமன் போன்றவனும்; குரு மா மணி சிறந்த நீலமணிமயமான; குன்றினை மலைபோன்ற அழகியவனும்; நின்றவூர் நின்ற திருநின்ற ஊரில் இருக்கும்; நித்திலத் தொத்தினை முத்துக் குவியல் போன்றவனும்; காற்றினை காற்றுப்போல் ஸுகமளிப்பவனும்; புனலை தண்ணீர்போல் உயிர்தரிக்கச் செய்யும் பெருமானை; சென்று நாடி சென்று நாடி; கண்ணமங்கையுள் திருக்கண்ண மங்கையில்; கண்டுகொண்டேனே கண்டுகொண்டேனே