PT 7.10.2

எல்லாப் பொருள்களுமாக இருப்பவன் பக்தவத்சலன்

1639 மெய்ந்நலத்தவத்தைத்திவத்தைத்தரும்
மெய்யைப்பொய்யினை கையில்ஓர்சங்குடை *
மைந்நிறக்கடலைக்கடல்வண்ணனை மாலை
ஆலிலைப்பள்ளிகொள்மாயனை *
நென்னலைப்பகலைஇற்றைநாளினை
நாளையாய்வரும்திங்களைஆண்டினை *
கன்னலைக்கரும்பினிடைத்தேறலைக்
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே.
1639 mĕyn nalat tavattai tivattait tarum *
mĕyyaip pŏyyiṉai kaiyil or caṅku uṭai *
main niṟak kaṭalaik kaṭal vaṇṇaṉai
mālai * āl ilaip pal̤l̤i kŏl̤ māyaṉai **
nĕṉṉalaip pakalai iṟṟai nāl̤iṉai *
nāl̤ai āy varum tiṅkal̤ai āṇṭiṉai *
kaṉṉalaik karumpiṉiṭait teṟalaik *
kaṇṇamaṅkaiyul̤ kaṇṭukŏṇṭeṉe-2

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1639. Thirumāl who is truth and falsehood and the result of true tapas gives Mokshā to all. He, the dark ocean-colored one with a conch in his hand is the Māyan who lay on a banian leaf. He is yesterday, the afternoon of today and tomorrow and the months and years. I found him, sweet as jaggery, as sugarcane, and as its juice in Thirukannamangai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மெய்ந் நல உண்மையான ஸ்வரூப ரூபனாய்; தவத்தை பக்திரூப தபஸ்வியாய்; திவத்தைத் தரும் பரமபதத்தைத் தரும்; மெய்யை பக்தியுள்ளவர்களுக்கு உபாயமானவனை; பொய்யினை அல்லாதவர்க்கு தானே இல்லாதவனாய்; கையில் ஓர் சங்கு உடை கையில் ஒரு சங்கை ஏந்திய; மைந் நிறக்கடலை கருத்த கடலை போன்றவனை; கடல் வண்ணனை கடலின் ரக்ஷக ஸ்வபாவமுடையவனை; மாலை திருமாலை; ஆலிலை ஆலிலையில்; பள்ளிகொள் மாயனை சயனித்திருக்கும் மாயனை; நென்னலை நேற்று அநுபவித்த சுகம் போல்; பகலை நெஞ்சைவிட்டு நீங்காதவனாய்; இற்றை நாளினை இன்று அநுபவிப்பவனாய்; நாளை ஆய் வரும் நாளை அநுபவிக்கப்படுபவன் போல்; திங்களை மாதங்கள் தோறும்; ஆண்டினை ஆண்டு தோறும்; கன்னலை இனியவனாய்; கரும்பிடைஇடைத் கரும்பின் ரஸம் போல்; தேறலை இனியவனானவனை; கண்ணமங்கையுள் திருக்கண்ண மங்கையில்; கண்டுகொண்டேனே கண்டுகொண்டேனே