PT 7.10.1

பத்தராவிப் பெருமாளைக் கண்டுகொண்டேன்

1638 பெரும்புறக்கடலைஅடலேற்றினைப்
பெண்ணை ஆணை * எண்ணில்முனிவர்க்கருள்
தருந்தவத்தைமுத்தின்திரள்கோவையைப்
பத்தராவியைநித்திலத்தொத்தினை *
அரும்பினைஅலரைஅடியேன்மனத்தாசையை
அமுதம்பொதியின்சுவை *
கரும்பினைக்கனியைச்சென்றுநாடிக்
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே. (2)
1638 ## pĕrum puṟak kaṭalai aṭal eṟṟiṉaip *
pĕṇṇai āṇai * ĕṇ il muṉivarkku arul̤
tarum tavattai muttiṉ tiral̤ kovaiyaip *
pattar āviyai nittilat tŏttiṉai **
arumpiṉai alarai aṭiyeṉ maṉattu
ācaiyai * amutam pŏti iṉ cuvai *
karumpiṉai kaṉiyai-cĕṉṟu nāṭik *
-kaṇṇamaṅkaiyul̤ kaṇṭukŏṇṭeṉe-1

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1638. I searched for him and in Thirukannamangai I found the lord who is the large ocean, a heroic bull, female and male, the results of tapas who gives endless grace to the sages, a precious chain of pearls, the soul of his devotees, the desire in my mind, a lovely bud, a fragrant blossom and as sweet as a fruit and sugarcane.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெரும் புற எல்லா கடல்களுக்கும் வெளியில் இருக்கும்; கடலை அடல் பெரும் கடலை மிடுக்குடைய; ஏற்றினை ரிஷபம் போன்ற சரீரமுடையவனாய்; பெண்ணை பெண்ணைப்போல் அடக்கமுடையவனாய்; ஆணை புருஷன் போல் ஸ்வதந்திரனாய்; எண் இல் கணக்கில்லாத தபஸையுடைய; முனிவர்க்கு முனிவர்களுக்கு; அருள் தபஸின் பலத்தைக் கொடுக்கும்; தரும் தவத்தை ஸர்வஜ்ஞனாய்; திரள் முத்தின் திரண்டிருக்கிற முத்துமாலைப் போல்; கோவையை இனியவனாய்; பத்தர் ஆவியை பக்தர்களுக்கு பிராணன் போல் தாரகனாய்; நித்திலத் தொத்தினை முத்து குவியல் போல் ரக்ஷகனாய்; அரும்பினை அரும்பு போல் குமாரன் போல்; அலரை மலர்ந்த புஷ்பம் போல் யௌவனாவஸ்தையை உடையவனாய்; அடியேன் மனத்து அடியேன் மனத்தில்; ஆசையை ஆசைக்கு விஷயமானவனாய்; அமுதம் அமுதத்தின்; பொதி இன் சுவை சுவை அதிசயமாக இருக்கும்; கரும்பினை கனியை கரும்பு போல் இனிய பெருமானை; சென்று நாடி தேடிக்கொண்டு போய்; கண்ணமங்கையுள் திருக்கண்ண மங்கையில்; கண்டுகொண்டேனே கண்டுகொண்டேனே