PT 7.1.9

நம்பி! உயிர்க்கெல்லாம் நீதான் தாய்

1556 தூயாய்! சுடர்மாமதிபோல்உயிர்க்கெல்லாம் *
தாயாயளிக்கின்ற தண்தாமரைக்கண்ணா *
ஆயா! அலைநீருலகேழும் முன்னுண்ட
வாயா! * உனைஎங்ஙனம் நான்மறக்கேனே?
1556 tūyāy cuṭar mā matipol * uyirkku ĕllām *
tāy āy al̤ikkiṉṟa * taṇ tāmaraik kaṇṇā! **
āyā alai nīr ulaku ezhum * muṉ uṇṭa
vāyā * uṉṉai ĕṅṅaṉam nāṉ maṟakkeṉe-9

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1556. You are pure, you have cool lotus eyes, you are like the beautiful shining moon, and like a mother you give your love to all creatures. O cowherd, you swallowed all the worlds surrounded with seven ocean roaring with waves. How could I forget you, the Lord of Naraiyur?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூயாய்! சுடர் தூயவனே! ஒளியுள்ள; மா மதிபோல் குளிர்ந்த சந்திரன் போல்; உயிர்க்கு உயிரினங்களுக்கு; எல்லாம் எல்லாம்; தாய் ஆய் தாய் போன்று; அளிக்கின்ற அருள் புரிபவனே!; தண் தாமரை குளிர்ந்த தாமரைப்; கண்ணா பூப்போன்ற கண்ணா; ஆயா! கோபாலனே!; அலை நீர் அலைகடல் சூழ்ந்த; உலகு ஏழும் ஏழு உலகங்களையும்; முன் உண்ட வாயா! முன்பு உண்டவனே!; உன்னை எங்ஙனம் உன்னை எப்படி; நான் மறக்கேனே நான் மறப்பேன்