PT 7.1.8

நம்பி! நான் எப்படி விடுவேன்?

1555 அத்தா! அரியே! என்று உன்னை அழைக்க *
பித்தாவென்றுபேசுகின்றார் பிறர்என்னை *
முத்தே! மணிமாணிக்கமே! முளைக்கின்ற
வித்தே! உன்னைஎங்ஙனம்நான்விடுகேனே!
1555 attā ariye ĕṉṟu * uṉṉai azhaikka *
pittā ĕṉṟu pecukiṉṟār * piṟar ĕṉṉai **
mutte maṇi māṇikkame * mul̤aikkiṉṟa
vitte * uṉṉai ĕṅṅaṉam nāṉ viṭukeṉe-8

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1555. If I call you saying, “You are my lord. You are Hari, ” others mock me and say I am crazy. You are a pearl, a precious diamond, a tender shoot that sprouts up. How could I leave you, the Lord of Naraiyur?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அத்தா! அரியே! என்று அத்தனே! அரியே! என்று; உன்னை அழைக்க உன்னை நான் அழைக்க; பிறர் என்னை பிறர் என்னை; பித்தா என்று பித்தனென்று; பேசுகின்றார் பேசுகின்றார்கள்; முத்தே! மணி முத்தே! மணியே!; மாணிக்கமே! மாணிக்கமே!; முளைக்கின்ற வித்தே! முளைக்கின்ற வித்தே!; உன்னை எங்ஙனம் உன்னை எப்படி; நான் விடுகேனே நான் விடுவேன்