PT 7.1.5

நம்பி! உன்னைத் தொழும் விதத்தைச் சொல்

1552 வில்லேர்நுதல் வேல்நெடுங்கண்ணியும்நீயும் *
கல்லார்கடுங்கானம் திரிந்தகளிறே! *
நல்லாய்! நரநாரணனே! எங்கள்நம்பி! *
சொல்லாய்உன்னை யான்வணங்கித்தொழுமாறே.
1552 vil er * nutal nĕṭuṅ kaṇṇiyum nīyum *
kal ār kaṭuṅ kāṉam * tirinta kal̤iṟe *
nallāy nara nāraṇaṉe! * ĕṅkal̤ nampi *
cŏllāy-uṉṉai * yāṉ vaṇaṅkit tŏzhum āṟe-5

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1552. As if you were a strong elephant, you wandered in the cruel mountainous forest with Sita, your wife with long spear-like eyes and a beautiful forehead like a bow. You are good, you are Nārāyanān and you took the form of a man-lion. Tell me, how can I bow to you, the Lord of Naraiyur and worship you?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வில் ஏர் வில் போன்ற; நுதல் வேல் நெற்றியும் வேல் போன்ற; நெடும் நீண்ட; கண்ணியும் கண்களையுமுடைய மஹாலக்ஷ்மியும்; நீயும் அவளுக்கு நாதனான நீயும்; கல் ஆர் கற்கள் நிறைந்த; கடுங் கானம் காட்டிலே; திரிந்த ஸஞ்சரித்த; களிறே! யானை போன்றவனே!; நல்லாய்! நன்மை அருள்பவனே!; நர நாரணனே! நர நாரணனே!; எங்கள் நம்பி! எங்கள் குண்பூர்ணனே!; உன்னை யான் உன்னை நான்; வணங்கி வணங்கி தொழும்; தொழும் ஆறே முறையை எனக்கு; சொல்லாய் சொல்லி அருள வேண்டும்