PT 6.9.8

மனமே! நறையூர் நம்பியின் நல்லடி நண்ணு

1535 குலையார்ந்தபழுக்காயும் பசுங்காயும்பாளைமுத்தும் *
தலையார்ந்தஇளங்கமுகின் தடஞ்சோலைத்திருநறையூர் *
மலையார்ந்தகோலஞ்சேர் மணிமாடம்மிகமன்னி *
நிலையாரநின்றான்தன் நீள்கழலேஅடைநெஞ்சே! (2)
1535 ## kulai ārnta pazhuk kāyum * pacuṅ kāyum pāl̤ai muttum *
talai ārnta il̤aṅ kamukiṉ * taṭañ colait tirunaṟaiyūr **
malai ārnta kolam cer * maṇi māṭam mika maṉṉi *
nilai āra niṉṟāṉ-taṉ * nīl̤ kazhale aṭai nĕñce-8

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1535. O heart, let us go and worship the ankleted feet of the lord who stays eternally in Thirunaraiyur surrounded with abundant groves where there are trees with clusters of betel nuts, unripe fruits, young kamugu trees and bamboos that hold pearls. That land is filled with many palaces that are like hills, studded with precious stones.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குலை குலைகளிலே; ஆர்ந்த நிறைந்து; பழுக் காயும் பழுத்திருக்கும் காய்களும்; பசுங் காயும் பழுக்கும் காய்களும்; பாளை பாளைகளில்; முத்தும் உண்டான முத்துக்களும்; தலை இளங்குலைகள்; ஆர்ந்த நிறந்திருக்கும்; இளங் இளம்; கமுகின் பாக்குமரங்களுடைய; தடஞ்சோலை விசாலமான சோலைகள் சூழ்ந்த; திருநறையூர் திருநறையூரிலிருக்கும் பெருமானை; மலை ஆர்ந்த மலை போன்ற; கோலம் சேர் அழகிய; மணி மாடம் மணிமயமான; மிக மன்னி கோயில்களில் பொருத்தமாக; நிலை ஆர நின்றான் தன் இருக்கும் பெருமானின்; நீள் கழலே வளமான பாதங்களை; அடை நெஞ்சே! பற்று நெஞ்சே!