PT 6.9.5

நறையூரில் ஆழியான் அடியினை சேர்

1532 அகிற்குறடும்சந்தனமும் அம்பொன்னும்அணிமுத்தும் *
மிகக்கொணர்ந்துதிரையுந்தும் வியன்பொன்னித்திருநறையூர் *
பகல்கரந்தசுடராழிப்படையான் இவ்வுலகேழும் *
புகக்கரந்ததிருவயிற்றன் பொன்னடியேஅடைநெஞ்சே!
1532 akil kuṟaṭum cantaṉamum * am pŏṉṉum aṇi muttum *
mikak kŏṇarntu tirai untum * viyaṉ pŏṉṉit tirunaṟaiyūr **
pakal karanta cuṭar āzhip * paṭaiyāṉ iv ulaku ezhum *
pukak karanta tiru vayiṟṟaṉ * pŏṉ-aṭiye aṭai nĕñce-5

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1532. O heart, let us go and worship the golden feet of Kannan who hid the sun with his shining discus in the Bhārathā war, and swallowed all the seven worlds and kept them in his stomach. He stays in Thirunaraiyur where the wonderful Ponni river with rolling waves brings abundant akil wood, sandalwood, precious gold and beautiful pearls and leaves them on its banks.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அகில் குறடும் அகில் கட்டைகளையும்; சந்தனமும் சந்தன கட்டைகளையும்; அம்பொன்னும் அழகிய பொன்னையும்; அணி முத்தும் அழகிய முத்துக்களையும்; மிகக்கொணர்ந்து நிறைய கொண்டு வந்து; உந்தும் தள்ளுகின்ற; திரை அலைகளையுடைய; வியன் ஆச்சர்யமான; பொன்னி காவேரியையுடைய; திருநறையூர் திருநறையூரிலிருக்கும் பெருமானை; பகல் பாரத யுத்தத்தில் ஜயத்ரதனை அழிக்க; கரந்த சூரியனை மறைத்த; சுடர் ஆழி ஒளி பொருந்திய; படையான் சக்கராயுதத்தையுடயவனை; இவ் உலகு இந்த; ஏழும் ஏழு உலகங்களையும்; புகக் கரந்த வயிற்றில்; திருவயிற்றன் மறைத்தவனின்; பொன் பொன்போன்ற; அடியே அடை திருவடிகளை அடைவாய்; நெஞ்சே! நெஞ்சே!